சாக்கு சொல்லாதீங்க.. விராட் கோலியும் அதை செய்யலயே.. இங்கிலாந்து அணியை விளாசிய நாசர் ஹுசைன்

Nasser Hussain 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் எதிரணிகளை அடித்து நொறுக்கி மிரட்டலாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறி வருகிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக தடுமாற்றத்துடன் செயல்பட்டு வந்த அந்த அணி மோர்கன் வருகைக்கு பின் அசால்டாக 400 ரன்கள் அடிக்கும் அதிரடிப்படையாக மாறியது.

மேலும் மோர்கன் ஓய்வுக்கு பின் 2022 டி20 உலகக் கோப்பையை ஜோஸ் பட்லர் தலைமையில் வென்ற இங்கிலாந்து அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கே சவாலை கொடுக்கும் முதல் அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து அப்படியே நேர்மாறாக தடுமாறி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

- Advertisement -

சாக்கு சொல்லாதீங்க:
இந்த நிலைமையில் அடுத்த 4 போட்டிகளில் வென்றாலும் மோசமான ரன் ரேட் கொண்டிருப்பதன் காரணமாக இங்கிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளதால் கோப்பையை தக்க வைக்கும் கனவு தகர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அதை விட கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்ற அந்த அணி சற்று பலவீனமாக இருக்கும் இலங்கையிடம் 150 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

இந்நிலைமையில் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் டி20, 100 பந்துகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து வீரர்கள் அதிகமாக விளையாடுவதே இந்த தோல்விக்கு காரணம் என்ற பேச்சுக்கள் அந்நாட்டில் காணப்படுகின்றன. ஆனால் விராட் கோலி, க்ளாஸென் போன்றவர்கள் தொடர்ந்து உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பும் நாசர் ஹுசைன் இதை ஒரு சாக்காக சொல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து அணியையும் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வீரர்களை பற்றி பேசுவதை நாம் விரும்புவதில்லை. சில நேரங்களில் ஆங்கில கிரிக்கெட்டில் நடப்பதாக உணர்கிறேன். 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் போது இதே ஸ்டைல் சிறந்தவையாக இருக்கவில்லையா? இது தான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் அமைப்பு. ஆனால் அதனால் நாம் அவமானப்படுகிறோம். அதாவது நாம் 20 ஓவர், 100 பந்து போட்டிகளில் அதிகமாக விளையாடும் அளவுக்கு 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று சொல்கிறோம்”

இதையும் படிங்கவிடைபெறும் டிராவிட்? 2023 உ.கோ முடிந்ததும் நடைபெறும் ஆஸி தொடரில் புதிய கோச்.. வெளியான தகவல்

“ஆனால் விராட் கோலி அல்லது ஹென்றிச் க்ளாஸென் போன்றவர்கள் உள்ளூர் அளவில் எவ்வளவு 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றனர்? அவர்கள் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. மாறாக உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 தொடரில் விளையாடி அதில் நல்ல அம்சங்களை கற்றுக் கொள்கின்றனர். அதனாலேயே அவர்கள் நல்ல அணியாகவும் இருக்கின்றனர். எனவே இது ஒரு நொண்டி சாக்கு” என்று கூறினார்.

Advertisement