அந்த மேட்ச்ல விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்துலையும் இந்திய கொடி பறந்திருக்கும் – சாஸ்திரி ஆதங்க பேட்டி

shastri
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்து நம்பிக்கை நட்சத்திரமாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதே போல் 2014இல் தோனி ஓய்வு பெற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார்.

ind vs eng

- Advertisement -

குறிப்பாக 2019/20 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா வரலாறு படைத்தது. மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக சந்தித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

சாஸ்திரி ஆதங்கம்:
ஆனால் அதில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியடைந்த பிசிசிஐ ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியையும் வலுக்கட்டாயமாக பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்தும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் விராட் கோலி அதிரடியாக ராஜினாமா செய்தார். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தொடரை வென்று சரித்திரம் படைத்த விராட் கோலி இங்கிலாந்தில் 2021இல் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை மிகச் சிறப்பாக வழி நடத்தி 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.

Ben Stokes Jasprit Bumrah ENG vs IND

ஆனால் லாக் டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்ட 5வது போட்டி கடந்த ஜூலையில் நடைபெற்றது. அப்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருந்த ரோகித் சர்மா கடைசி நேரத்தில் துரதிஷ்டவசமாக விலகியதால் யாருமே எதிர்பாராத வகையில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவரது தலைமையிலான இந்தியாவை பென் ஸ்டோக்ஸ் புதிய பாதையில் நடந்த இங்கிலாந்து அடித்து நொறுக்கி தோற்கடித்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்நிலையில் அத்தொடரில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவை போலவே 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்திருக்கும் என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தற்போதைய ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி நிர்வாகம் மீண்டும் கேட்டதால் வழி நடத்தியது போல இந்திய நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு கேட்டிருந்தால் நிச்சயமாக அப்போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று நினைத்தேன். குறிப்பாக ரோகித் சர்மா விலகியதும் அவர் கேப்டனாக செயல்பட பிசிசிஐ அழைக்கும் என்று எதிர்பார்த்தேன்”

Ravi-Shastri

“ஒருவேளை அந்த போட்டியில் நான் இருந்திருந்தால் அதை செய்திருப்பேன். ராகுல் டிராவிட் அதை செய்வார் என்று எதிர்பார்த்தும் செய்யாததால் அதைப் பற்றி அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. ஒருவேளை நானாக இருந்திருந்தால் அப்போட்டியில் விராட் கோலி கேப்டனாக வழிநடத்த பிசிசிஐக்கு பரிந்துரைத்திருப்பேன். ஏனெனில் 2 – 1 என முன்னிலை பெற்றுக் கொடுத்த அவர் நிச்சயமாக அந்த போட்டியில் சிறந்த முடிவை கொண்டு வந்திருப்பார். உங்கள் நாட்டுக்காக கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய பெருமையாகும்”

இதையும் படிங்க:LSG vs PBKS : பஞ்சாப் அணியை வீழ்த்த நாங்க போட்ட பிளான் இதுதான் – நிக்கோலஸ் பூரான் பேட்டி

“அது போன்ற சமயங்களில் நீங்கள் சிறந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் உங்களுடைய முதன்மை கேப்டன் காயமடைந்த போது 2 – 1 என்ற கணக்கில் சொந்த மண்ணில் பின்தங்கியுள்ள இங்கிலாந்தை வேறு யாரால் வீழ்த்த முடியும். அதை விட உலகின் எத்தனை அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை ஒரே வருடத்தில் அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்தன” என்று கூறினார்.

Advertisement