இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழந்து 257 ரன்களை எடுத்தது. பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களை மட்டுமே அடித்தது.
அதன் காரணமாக லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பேட்டிங்கில் 19 பந்துகளை சந்தித்த லக்னோ அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பூரான் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 45 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
லக்னோ அணி பெற்ற இந்த வெற்றிக்கு அவரது பங்கும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய நிக்கோலஸ் பூரன் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.
அதோடு இந்த இரண்டு புள்ளிகள் கிடைத்தது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு முழுவதும் சாதகமாக இருந்தது. அதேபோன்று பந்துவீச்சில் நாங்கள் பவுலிங் செய்ய வரும்போது ஒரே ஒரு பிளான் எங்களிடம் இருந்தது. அதாவது மைதானத்தின் ஒரு புறம் மிகவும் பெரியது, ஒருபுறம் மிகவும் சின்னது.
இதையும் படிங்க : IPL 2023 : என்னய்யா முட்டாள்தனம் இது? நான் கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தேனா – ராயுடு கோபமான ட்வீட், நடந்தது என்ன
எனவே பேட்ஸ்மேன்களை பெரிய திசையை நோக்கி அடிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். அந்த வகையில் வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சி. எனது இந்த பேட்டிங் பார்மை இனிவரும் போட்டிகளிலும் தொடருவேன் என நிக்கோலஸ் பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.