IPL 2023 : என்னய்யா முட்டாள்தனம் இது? நான் கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தேனா – ராயுடு கோபமான ட்வீட், நடந்தது என்ன

Sunil Gavaskar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 203 ரன்களை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே 8 (16) ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை கொடுத்த நிலையில் ருதுராஜ் போராடி 47 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அப்போது வந்த ரகானே 15 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டாக அடுத்ததாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அம்பாதி ராயுடு கொஞ்சமும் பொறுப்பின்றி டக் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினார். அதனால் சிவம் துபே 52 (33) மொய்ன் அலி 23 (12) ஜடேஜா 23* (15) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் போராடியும் 20 ஓவர்களில் 170/6 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை ஃபினிஷிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது. முன்னதாக கடந்த பல வருடங்களாக மும்பை போன்ற அணிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்காக வாங்கப்பட்ட ராயுடு 602 ரன்கள் குவித்து 3வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ராயுடு ஆவேசம்:
இருப்பினும் 2019 உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனதால் மனமுடைந்தது போல் அப்போதிலிருந்து சமீப காலங்களாகவே அதிரடியாக செயல்பட முடியாமல் தவித்து வரும் அவர் 38 வயதை கடந்து விட்டதால் இந்த சீசனில் இம்பேக்ட் வீரராக களமிறங்கும் வாய்ப்பை சென்னை நிர்வாகம் கொடுத்துள்ளது. ஆனாலும் இந்த வருடம் எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தாத அவர் a அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் எதுவும் செய்யாமல் புத்துணர்ச்சியுடன் இம்பேக்ட் வீரராக களமிறங்கியும் சென்னை அணியின் வெற்றிக்கு எந்த பயனையும் ஏற்படுத்தவில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விமர்சித்தார்.

குறிப்பாக டெல்லி அணியில் இம்பேக்ட் வீரராக விளையாடி சோம்பேறித்தனமாக செயல்பட்ட பிரிதிவி ஷா போல சென்னை அணியில் ஃபீல்டிங் எதுவும் செய்யாமல் நேரடியாக பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயுடு சுமாராக செயல்பட்டதை அவர் விமர்சித்தார். அத்துடன் ஃபீல்டிங் செய்யாமல் இப்படி பேட்டிங் செய்வதற்கு மட்டும் வழி வகுக்கும் இம்பேக்ட் விதிமுறை வீரர்களிடம் இது போன்ற சோம்பேறித்தனத்தை உருவாக்குவதாகவும் அவர் அதிருப்தியை தெரிவித்திருந்தார். அந்த நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராயுடு போட்ட ட்வீட் பின்வருமாறு.

- Advertisement -

“இந்த வாழ்க்கை மற்றும் விளையாட்டு மேடு பள்ளங்கள் இருப்பது நிலையானதாகும். அதில் நாம் நேர்மறையாக இருந்து கடினமாக உழைத்து அவற்றை நமது பக்கம் திருப்ப வேண்டும். போட்டியின் முடிவுகள் நம்முடைய உழைப்பை எப்போதும் மதிப்பிடாது. எனவே எப்போதும் சிரித்துக் கொண்டு செயல்பாடுகளில் கவனத்தைக் காட்ட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

2019 உலகக்கோப்பையில் தமக்கு பதிலாக முப்பரிமாண வீரர் தேவை என்பதால் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்ட போது அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க 2 முப்பரிமான கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளதாக இதே ட்விட்டரில் ராயுடு போட்ட ட்வீட் யாராலும் மறக்க முடியாது. சொல்லப்போனால் அதுவே தேர்வு குழுவினரிடம் வன்மத்தை ஏற்படுத்தி அவருடைய இந்திய கேரியர் முடிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி ட்விட்டரில் மறைமுகமாக பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ள காரணத்தால் கவாஸ்கர் சொன்ன அந்த கருத்துக்களுக்கும் ராயுடு இப்படி மறைமுக பதிலடி கொடுத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

- Advertisement -

ஆனால் உண்மையாகவே அப்படி ஒரு எண்ணத்தில் பதிவிடாத காரணத்தால் கோபமடைந்துள்ள ராயுடு ஜாம்பவான் கவாஸ்கருக்கு எந்த வகையிலும் தாம் பதிலடி கொடுக்கவில்லை என்று ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்து மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : மலிங்காவை அடிச்ச எனக்கு வாய்ப்பில்லையா? ரியன் பராக் ஆவேசம் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள், நடந்தது என்ன

“என்ன முட்டாள்தனம். எனது ட்வீட்டிற்கும் திரு கவாஸ்கரின் கருத்துக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது ஃபீல்டிங் தொடர்பாக அவருடைய கருத்துக்களை நான் மதிக்கின்றேன். ஒரு வீரர் தாம் களமிறங்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை” என்று கூறினார்.

Advertisement