டு பிளேஸிஸை தூக்கிட்டு அவரை கேப்டனா போடுங்க.. அட்லீஸ்ட் ஆர்பிசி வெற்றிக்கு போராடும்.. ஹர்பஜன் கோரிக்கை

Harbhajan Singh 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் கோப்பையை முத்தமிடும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் துவங்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதனால் இம்முறை கண்டிப்பாக ஆடவர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லும் என்று ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் பஃப் டு பிளேஸிஸ் தலைமையில் களமிறங்கியுள்ள பெங்களூரு அணி இந்த வருடமும் அதே தடுமாற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வெல்லும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் அடிப்பகுதியில் தவித்து வருகிறது.

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:
இந்நிலையில் பஃப் டு பிளேஸிஸ் தலைமையில் பெங்களூரு அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் வேதனையை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக மீண்டும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஹர்பஜன் அதிரடியான கோரிக்கையை வைத்துள்ளார்.

ஏனெனில் இதற்கு முன் கோப்பையை வெல்லாவிட்டாலும் விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடியதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். எனவே மீண்டும் விராட் கோலி கேப்டனாக வந்தால் பெங்களூரு அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன்.

- Advertisement -

“அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும். விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார். பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார். அதாவது டு பிளேஸிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார்”

இதையும் படிங்க: 196 ரன்ஸ்.. 5 விக்கெட்ஸ் எடுத்து மிரட்டிய பும்ரா அசத்தல் சாதனை.. ஃபினிஷிங்கில் மாஸ் காட்டிய டிகே

“எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்” என்று கூறினார். முன்னதாக 2013 – 2021 வரை விராட் கோலி தலைமையில் விளையாடிய பெங்களூரு அணி 2016இல் ஃபைனல் வரை சென்று கோப்பையை கோட்டை விட்டது. இதர சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கே தடுமாறியதால் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி கடைசியில் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement