196 ரன்ஸ்.. 5 விக்கெட்ஸ் எடுத்து மிரட்டிய பும்ரா அசத்தல் சாதனை.. ஃபினிஷிங்கில் மாஸ் காட்டிய டிகே

MI vs RCb
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் 25வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு தடுமாற்றமாக விளையாடிய விராட் கோலி 3 (9) ரன்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது முதல் முறையாக களமிறங்கிய வில் ஜேக்ஸ் 8 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த ரஜத் படிடார் முதல் முறையாக அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடி பெங்களூருவுக்கு ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மிரட்டிய பும்ரா:
அந்த வகையில் 12 ஓவர்கள் வரை அசத்தலாக விளையாடிய இந்த ஜோடி 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அதில் 25 பந்தில் அரை சதமடித்த படிடார் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 50 (26) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அப்போது வந்த கிளன் மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் சமன் செய்தார்.

அவருடன் சேர்த்து ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தலா 17 முறை டக் அவுட்டாகி இந்த பரிதாப சாதனைக்கு சொந்தமாக திகழ்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் இந்த சீசனில் முதல் அரை சதமடித்து 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 61 (40) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அவரை அவுட்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த மகிபால் லோம்ரரையும் கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இருப்பினும் அப்போது தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். ஆனாலும் எதிர்ப்புறம் வந்த சௌரவ் சவுகானை 9 ரன்களில் காலி செய்த பும்ரா விஜய்குமாரை டக் அவுட்டாக்கினார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரியுடன் 4 சிக்சருடன் 53* (23) ரன்கள் விளாசி மாஸ் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 196/8 ரன்கள் குவித்து அசத்தியது.

இதையும் படிங்க: அவர் மட்டும் தடுக்கலன்னா இந்நேரம் கனடா நாட்டுக்கு விளையாடிட்டு இருப்பேன்.. பின்னணியை பகிர்ந்த பும்ரா

மறுபுறம் சராசரியாக பந்து வீசிய மும்பை சார்பில் பும்ரா மட்டும் துருவ நட்சத்திரமாக நான்கு ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 2 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற புவனேஸ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், ஜேம்ஸ் பஃல்க்னர் (தலா 2) சாதனையை அவர் சமன் செய்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக முறை (21 முறை) ஒரு போட்டியில் 3+ விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் பும்ரா படைத்தார். இதற்கு முன் சஹால் 20 முறை 3 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement