அவர் மட்டும் தடுக்கலன்னா இந்நேரம் கனடா நாட்டுக்கு விளையாடிட்டு இருப்பேன்.. பின்னணியை பகிர்ந்த பும்ரா

Jasprit Bumrah 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான அவர் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இருப்பினும் இந்த பவுலிங் ஆக்சனை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தன.

ஆனால் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான பும்ரா ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அபாரமாக பந்து வீசி அனைவரது கருத்துக்களையும் பொய்யாக்கினார். அத்துடன் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி தொடரை வெல்ல உதவிய அவர் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார்.

- Advertisement -

கனடா திட்டம்:
மேலும் வேகப்பந்து வீச்சு துறையில் இந்தியா புதிய உச்சத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாகவும் திகழும் அவர் போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கரை வீசி வெற்றியை பெற்று தரக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படுகிறார். அது போக விராட் கோலியை போலவே டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சமமான தாக்கத்தை ஏற்படுத்தும் அவர் தனித்துவமான பவுலராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் படிப்பை முடித்ததும் கனடா நாட்டுக்கு சென்று அங்கே கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக பும்ரா கூறியுள்ளார். ஏனெனில் போட்டி மிகுந்த இந்திய அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்று நினைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த சமயத்தில் தம்முடைய அம்மா அதை தடுத்ததால் தற்போது இந்தியாவுக்காக விளையாடுவதாக பும்ரா கூறியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே படிப்பை முடித்ததும் நான் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய சொந்தக்காரர்கள் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: ஹர்டிக் – க்ருனால் பாண்டியாவை 4.3 கோடி ரூபாய் ஏமாற்றிய அவரின் அண்ணன் கைது.. காரணம் என்ன?

“அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் அந்த நேரம் என்னுடைய அம்மா பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வந்தது. எனவே கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை. அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. இல்லையென்றால் கனடா அணிக்காக விளையாட முயற்சித்திருப்பேன். இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்” என்று கூறினார்.

Advertisement