ஹர்டிக் – க்ருனால் பாண்டியாவை 4.3 கோடி ரூபாய் ஏமாற்றிய அவரின் அண்ணன் கைது.. காரணம் என்ன?

Hardik Pandya Brother
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதே மும்பை அணிக்காக 2016ஆம் ஆண்டு அறிமுகமான பாண்டியா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக இந்திய அணியில் அறிமுகமான அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் நாளடைவில் காயத்தை சந்தித்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மொத்தமாக முழுக்க போட்ட அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் காயம் மற்றும் பணிச்சுமையால் என்ற பெயரில் இந்தியா விளையாடும் 100% போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் தவறாமல் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வழக்கத்தை ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார்.

- Advertisement -

ஏமாற்றப்பட்ட பாண்டியா:
எனவே பணத்திற்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா நாட்டுக்காக விளையாடுவதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்திக் மற்றும் க்ருனால் பாண்டியா சகோதரர்களுக்கு வைபவ் பாண்டியா என்ற ஒன்று விட்ட அண்ணன் இருக்கிறார். 37 வயதாகும் அவருடன் சேர்ந்து மும்பையில் பாண்டியா சகோதரர்கள் 4.30 கோடி ரூபாய் செலவில் பாலிமர் பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளனர்.

அதில் ஹர்டிக் மற்றும் க்ருனால் ஆகியோர் தலா 40% முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. மறுபுறம் 20% மட்டும் முதலீடு செய்த வைபவ் அந்த தொழிலை தினம்தோறும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்று நடத்துவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதே போல கிடைக்கும் வருமானம் மூவருக்கும் 40%, 40%, 20% என்ற வகையில் பகிர்ந்து கொள்ளும் வகையில் பாண்டியா சகோதரர்கள் ஒப்பந்தத்தை போட்டு தொழிலை துவக்கியுள்ளனர்.

- Advertisement -

ஆனால் சில காலம் கழித்து தான் ஹர்டிக் மற்றும் க்ருனால் ஆகியோரின் அனுமதி இல்லாமல் அந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை வைத்து வைபவ் வேறொரு தொழிலை துவங்கியுள்ளது தெரிய வந்தது. மேலும் ஒப்பந்தப்படி 20% மட்டுமே கிடைக்க வேண்டிய தன்னுடைய வருமானத்தை ஹர்திக் மற்றும் க்ருனால் ஆகியோருக்கு தெரியாமலேயே வைபவ் 33.3% தனது வங்கிக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: 2016 சம்பவத்தை மறக்க முடியுமா.. 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை செலக்ட் பண்ணாதீங்க.. மேக்ஸ்வெல் பேட்டி

அதனால் ஏமாற்றமடைந்த ஹர்டிக் – க்ருனால் ஆகியோர் மும்பை காவல்துறையில் புகார் செய்துள்ளனர். அதன் காரணமாக தற்போது வைபவ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் மிகவும் நம்பிய அண்ணனே இப்படி பாண்டியா சகோதரர்களை ஏமாற்றியுள்ளது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Advertisement