2016 சம்பவத்தை மறக்க முடியுமா.. 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை செலக்ட் பண்ணாதீங்க.. மேக்ஸ்வெல் பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு இந்திய தேர்வுக் குழு பரிசீலித்து செய்திகள் காணப்படுகின்றன. ஏனெனில் பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் நிதானமாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ள விராட் கோலி சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யும் அணுகு முறையை கொண்டவர்.

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பெரும்பாலான மைதானங்கள் ஸ்லோவாக இருக்கும். எனவே அங்கு விராட் கோலியின் அணுகு முறை பொருந்தாது என்று கருதும் தேர்வுக் குழு அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிறைய முன்னாள் வீரர்கள் விராட் கோலி விளையாட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

செலக்ட் பண்ணாதீங்க:
இந்நிலையில் விராட் கோலியை 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தேர்வு செய்யக்கூடாது வீரர் என்று நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஜாலியாக தெரிவித்துள்ளார். குறிப்பாக 2016 டி20 உலகக் கோப்பையில் மொகாலியில் நடைபெற்ற செமி ஃபைனலில் அபாரமாக விளையாடிய விராட் கோலி ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்ததை மேக்ஸ்வெல் நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே விராட் கோலியை போன்ற வீரர் இந்திய அணியில் இருப்பது தங்களைப் போன்ற எதிரணிகளுக்கு ஆபத்து என்று பாராட்டும் மேக்ஸ்வெல் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இதுவரை நான் எதிராக விளையாடிய வீரர்களில் விராட் கோலி தான் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர். 2016 டி20 உலகக் கோப்பையில் மொஹாலியில் எங்களுக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் மிகவும் சிறந்தது”

- Advertisement -

“வெற்றி பெறுவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அவரது விழிப்புணர்வு அபாரமானது. எனவே இந்தியா அவரை இம்முறை தேர்ந்தெடுக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் அவருக்கு எதிராக நாங்கள் விளையாடாமல் இருப்பது மிகவும் நல்லது. இந்தியாவில் இருக்கும் 1.5 பில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிரிக்கெட்டார்கள்”

இதையும் படிங்க: வேற மாதிரி விளையாடும் இந்த பையன் மீது இந்திய தேர்வுக்குழு கண்ணு வச்சுக்கணும்.. கவாஸ்கர் பாராட்டு

“அதனால் இந்த ஐபிஎல் தொடரில் இந்தியாவில் எவ்வளவு டாப் டி20 வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பாருங்கள். மிகவும் திறமையான அந்த வீரர்களிடம் சாதிப்பதற்கான நெருப்பு இருக்கிறது” என்று கூறினார். இந்த நிலையில் விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகின்றனர். அந்தத் தொடரிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பையை தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement