வேற மாதிரி விளையாடும் இந்த பையன் மீது இந்திய தேர்வுக்குழு கண்ணு வச்சுக்கணும்.. கவாஸ்கர் பாராட்டு

Sunil Gavaskar 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 68* (38) ரியன் பராக் 76 (48) ரன்கள் அடித்தனர்.

பின்னர் சேசிங் செய்த குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 72 (44) ராகுல் திவாடியா 22 (11) ரசித் கான் 24* (11) ரன்கள் அடித்து கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் 4 தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பின் இந்த போட்டியில் முதல் முறையாக ராஜஸ்தான் தோல்வியை பதிவு செய்தது. இருப்பினும் அந்த அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அபாரமாக பேட்டிங் செய்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
குறிப்பாக 0, 6 ரன்களில் கொடுத்த கேட்சை தவற விட்டதற்காக கடைசியில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 76 (48) ரன்கள் அடித்த ரியன் பராக் குஜராத்துக்கு தக்க தண்டனை கொடுத்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் முதல் 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டு வந்த அவர் விமர்சனங்கள் மட்டும் கிண்டல்களை சந்தித்தார்.

ஆனால் இந்த வருடம் அதற்கு நேர்மாறாக விளையாடும் அவர் 43, 84, 54, 4, 76 என 5 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 261 ரன்களை 87.00 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு நெருக்கமாக இருந்து வரும் அவர் தற்போது கிண்டலடித்த ரசிகர்களை பாராட்ட வைத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் வேறு மாதிரி விளையாடும் ரியான் பராக் மீது இந்திய தேர்வு குழுவினர் ஒரு கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கேட்ச் தவற விட்ட குஜராத்துக்கு ரியான் பராக் தக்க பரிசை கொடுத்தார். இது தான் கிரிக்கெட்டாகும்”

இதையும் படிங்க: ராகுல், பண்ட் கிடையாது.. ரோஹித்துக்கு பின் அவர் தான் தகுதியான டெஸ்ட் கேப்டன்.. சித்து தேர்வு

“உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் நம்ப முடியாத கிரிக்கெட்டை விளையாடினார். ஐபிஎல் மட்டுமல்லாமல் இந்த வருடம் உள்ளூர் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் நல்ல வெற்றிகளை கண்டுள்ளார். அதனால் தன் மீது அவர் தேர்வுக் குழுவினர் ஒரு கண்ணை வைக்க வைத்துள்ளார். ஃபீல்டிங்கில் அசத்தக்கூடிய அவர் பந்து வீச்சிலும் சில ஓவர்களை வீசுவார். அதை நான் மிக்சர் பக்கோடா என்றழைப்பேன்” என்று கூறினார்.

Advertisement