தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள் – லிஸ்ட் இதோ

kohli 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள மைதானத்தில் துவங்க உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியை இந்திய அணி கைப்பற்றி உள்ளதால் இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சில சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார். அதன்படி அவர் படைத்த காத்திருக்கும் சாதனைகள் குறித்த விவரங்களை தான் இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். போட்டி நடைபெறும் வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்னும் ஏழு ரன்கள் அடித்தால் போதும் அந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி படைப்பார்.

இதுவரை குறிப்பிட்ட அந்த மைதானத்தில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள கோலி 310 ரன்களை அடித்துள்ளார். மேலும் 7 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஜான் ரீட் (316ரன்கள்) சாதனையை அவர் முறியடிப்பார், அதோடு தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 1161 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

kohli 1

அவருக்கு அடுத்ததாக டிராவிட் 624 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த இடத்தில் கோலி 611 உடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் மேலும் 14 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டிராவிட்டை கடந்து சச்சினுக்கு அடுத்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட – இதுதான் காரணம்

அதோடு இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் கோலியின் கேப்டன்சி பெறும் 41வது வெற்றியாக இது அமையும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய ஸ்டீவ் வாக்(41) இன் சாதனையை சமன் செய்து அந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பகிர்ந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement