ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட – இதுதான் காரணம்

Bumrah-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்படும் போது கேப்டனாக ராகுலும், துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் அறிவிக்கப்பட்டனர். ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியதன் காரணமாக ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார் இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

Bumrah

- Advertisement -

ஏனெனில் பெரும்பாலான விமர்சகர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் துணை கேப்டன் பதவி கிடைக்கும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் இந்திய அணியை வெளியிடும்போது துணை கேப்டனாக பும்ரா செயல்பட இருப்பதாக தேர்வுக்குழு நிர்வாகிகள் தகவலை வெளியிட்டிருந்தனர். அப்படி துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வெளியான கருத்தில் ரோகித் சர்மா தற்போது காயமடைந்து வெளியேறி இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடருக்கான அணியில் இணைந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை ராகுல் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார். ரோகித் வந்தவுடன் மீண்டும் ராகுல் துணை கேப்டனாக மாறிவிடுவார்.

bumrah

ஆனால் தற்போதைக்கு நாங்கள் பும்ராவிற்கு துணை கேப்டன் பதவியை வழங்க காரணம் யாதெனில் : தொடர்ச்சியாக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா போட்டியை சிறப்பாக அணுகும் கிரிக்கெட் மூளையை உடையவர். தொடர்ந்து தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்து வரும் அவருக்கு ஏன் இந்த பதவியை வழங்க கூடாது என்று தோன்றியது. அதுமட்டுமின்றி ஒரு வேகப்பந்து வீச்சாளராக அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டியில் விளையாட அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது இவரால்தான் – ரித்தீந்தர் சோதி ஓபன்டாக்

அவருக்கு இதுபோன்ற ஒரு தலைமை பொறுப்பை வழங்கும் போது அது இந்திய அணிக்கு அனுகூலம்தான். போட்டியை நன்றாக புரிந்து கொள்ளும் திறன் அவரிடம் இருப்பதனால் தான் அவருக்கு துணை கேப்டன் பதவியை வழங்கி உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement