ஒருநாள் போட்டியில் விளையாட அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது இவரால்தான் – ரித்தீந்தர் சோதி ஓபன்டாக்

Reetinder
- Advertisement -

தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதுவரை 82 டெஸ்ட் போட்டிகள், 111 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்திய அணிக்காக பல முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது.

Ashwin

- Advertisement -

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த அஷ்வின் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட தற்போது தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஷ்வின் இந்திய அணிக்காக ஒருநாள் தொடரில் மீண்டும் வாய்ப்பை பெற யார் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் ஒயிட்பால் கிரிக்கெட் கரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே நினைத்திருப்பார். ஆனால் அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு ராகுல் டிராவிட் மற்றும் அணியின் நிர்வாகமும் தான் கரணம்.

ashwin 1

அவர்கள் அஷ்வின் மீது வைத்த நம்பிக்கையில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அஷ்வினின் அனுபவத்தின் மீது அவர்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே தற்போது அவருக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : பும்ராவிற்கு துணைக்கேப்டன் பதவியை எதுக்கு குடுத்தாங்க. அதுல அர்த்தமே இல்ல – முன்னாள் வீரர் சாடல்

அஷ்வினுக்கு இந்த வாய்ப்பு என்பது லாட்டரி அடித்தது போன்று. கிட்டத்தட்ட கரியர் முடிந்துவிட்டது என்று எதிர்பார்த்த வேளையில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர் தான். அவரின் அனுபவம் காரணமாகவே டிராவிட் மற்றும் அணி நிர்வாகிகள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் ரிதீந்தர் சோதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement