பும்ராவிற்கு துணைக்கேப்டன் பதவியை எதுக்கு குடுத்தாங்க. அதுல அர்த்தமே இல்ல – முன்னாள் வீரர் சாடல்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பி.சி.சி.ஐ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால் புதிய கேப்டனாக ராகுலும், துணை கேப்டனாக பும்ராவும் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதுதவிர 18 பேர் கொண்ட அணி வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த அணி வெளியானதில் இருந்தே அதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

அதில் குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் கெய்க்வாட் ஆகியோரது சேர்க்கை சரியான ஒன்று என்று மக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை கேப்டனாக பும்ராவை நியமித்தது தவறு என்றும் அவருக்கு எதற்காக அந்த பதவியை வழங்கினார்கள் என்றும் இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர் :

Karim

பும்ராவை துணை கேப்டனாக நியமித்தது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஏனெனில் இதுவரை கேப்டன்சி செய்யாத அவருக்கு இதுபோன்ற பதவியை எவ்வாறு வழங்கினார்கள் என்று தெரியவில்லை. அவரை தவிர்த்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவது மட்டுமின்றி ஏற்கனவே டெல்லி அணியையும் கேப்டன்சி செய்திருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிராக நாங்க பண்ண அந்த சம்பவம் தான் 2021-ல தரமான சம்பவம் – பாபர் அசாம் பேட்டி

இதன் காரணமாக அவர்கள் இருவரில் ஒருவருக்கு துணைக்கேப்டன் பதவியை வழங்கி இருக்கலாம் ஆனால் அவர்களை தவிர்த்து பும்ராவிற்கு துணை கேப்டன் பதவி கிடைத்திருப்பது வியப்பாகத்தான் உள்ளது எனவும் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

Advertisement