இந்தியாவுக்கு எதிராக நாங்க பண்ண அந்த சம்பவம் தான் 2021-ல தரமான சம்பவம் – பாபர் அசாம் பேட்டி

Azam
Advertisement

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு முற்றிலும் மாறிப்போன கிரிக்கெட் உலகமானது பயோ பபுளில் தொடர்ந்து விளையாடி வருகிறது. 2020ஆம் ஆண்டு பல தொடர்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் 2021 ஆம் ஆண்டு ஓரளவு ரசிகர்களை திருப்தி செய்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல சுவாரசியமான நிகழ்வுகள் கிரிக்கெட் உலகில் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

INDvsPAK

இந்நிலையில் இந்த 2021-இல் பாகிஸ்தான் அணி சந்தித்த சிறப்பான தருணம் குறித்து அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த வருடம் நாங்கள் சந்தித்த மிகச் சிறந்த தருணம் யாதெனில் துபாய் மைதானத்தில் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராக பெற்ற வெற்றிதான். ஏனெனில் இதுவரை ஐசிசி தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை.

- Advertisement -

அப்படி ஒரு மோசமான சாதனையை போக்கி நாங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்றோம். அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தும் நாங்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் அந்த போட்டியை வெற்றி பெற்று இருந்ததால் இந்த 2021 ஆம் ஆண்டின் சிறப்பான தருணமாக நான் அதைப் பார்க்கிறேன் என்று பாபர் அசாம் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அந்த டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 151 ரன்கள் குவித்தது.

rizwan

அதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி இந்த 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இதையும் படிங்க : ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி வைத்துள்ள ரெக்கார்டு பற்றி தெரியுமா? – இப்போவே வெற்றி உறுதி

இருப்பினும் ஒரு அணியாக பாகிஸ்தான் அணி இந்த 2021-ஆண்டு மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக மாறி உள்ளதால் இந்த 2021 ஆம் ஆண்டு அவர்களுக்கு நல்ல ஒரு ஆண்டாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement