ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி வைத்துள்ள ரெக்கார்டு பற்றி தெரியுமா? – இப்போவே வெற்றி உறுதி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளதால் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

INDvsRSA

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இந்த இரண்டாவது போட்டிக்கான ஜோகனஸ்பர்க் மைதானம் இந்திய அணிக்கு எவ்வளவு ராசியான ஒரு மைதானம் என்பதைத்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். அதன்படி இதுவரை இந்த குறிப்பிட்ட மைதானத்தில் இந்திய அணி ஐந்து முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அப்படி இந்திய அணி விளையாடிய இந்த 5 போட்டிகளில் இரண்டு முறை வெற்றியும், மூன்று முறை டிராவும் செய்துள்ளது.

- Advertisement -

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் ஒருமுறை கூட நாம் இந்த மைதானத்தில் தோற்றது கிடையாது. எனவே நிச்சயம் இந்திய அணிக்கு இந்த மைதானம் ஒரு சாதகமான மைதானமாக தான் இருந்து வருகிறது. அது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இது மிகவும் ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 310 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஆடிய இந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருக்கிறார்.

kohli century

எனவே நிச்சயம் அவர் இந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வரும் மோசமான நிகழ்வை இந்த மைதானத்தில் வைத்து தீர்த்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கலாம். அதேவேளையில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரும் இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடி உள்ளதால் நிச்சயம் இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற ஒரு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சதம் அடிக்கும் வெறியில் இருக்காரு. இனிமே அடிக்கபோறேதெல்லாம் மரண அடிதான்- கவாஸ்கர் ஓபன்டாக்

இந்த போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் வென்று விடும். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணி தற்போது பலமிழந்து காணப்படுவதாலும், டிகாக் அணியில் இருந்து வெளியேறி உள்ளதாலும் அந்த அணி அனுபவ வீரர்கள் இன்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி இப்போதே வெற்றி பெற்றது என்று நம்மால் கூறமுடியும்.

Advertisement