சதம் அடிக்கும் வெறியில் இருக்காரு. இனிமே அடிக்கபோறேதெல்லாம் மரண அடிதான்- கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணிக்கு இம்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்ற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

INDvsRSA

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளதால் நிச்சயம் அடுத்துவரும் இரண்டு போட்டிகளையும் டிரா செய்தாலே அல்லது ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலோ இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். இதன் காரணமாக இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தீவிரம் காட்டும் என்றும் கூறப்படுகிறது. முதலாவது போட்டியில் வெற்றிபெற இந்திய அணியின் துவக்க வீரர் ராகுலின் ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இன்னிங்ஸாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் மைதானத்தில் தன்மையை அறிந்து சிறப்பாக விளையாடிய அவர் முதல் இன்னிங்சில் 123 ரன்கள் குவித்து இந்திய அணி முன்னிலை பெற உதவினார். இந்நிலையில் ராகுலின் ஆட்டம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் இனிவரும் போட்டிகளிலும் அவர் சதங்களை விளாசி தள்ளுவார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் எப்போதுமே ஒரு திறமையான கிரிக்கெட்டர் தான். 2014ம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தாலும் முதல் 2-3 ஆண்டுகள் அவரால் பெரிய அளவில் தனது ஆட்டத்தை வெளிக்கொணர முடியவில்லை.

rahul 1

அவரது திறன் குறைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக அவர் மாறியுள்ளார். அது மட்டுமின்றி அவருடைய தன்னம்பிக்கையும் மீண்டு அவருக்கு கிடைத்துள்ளது. தனது திறமையை தற்போது அவர் சிறப்பாக வெளிக்கொண்டு வருகிறார். என்னைப்பொறுத்தவரை அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் சதங்களை தொடர்ந்து அடிப்பார்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அவரிடம் இப்போது சதங்களை குவிக்க வேண்டிய ஒரு வெறி இருக்கிறது. நிச்சயம் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கப்போகிறார் என்று கூறினார். அவருடைய பேட்டில் இருந்து இன்னும் பல சதங்கள் வரும் அவர் இன்னும் பெரிய வீரராக அனைவரது மத்தியிலும் வரவேற்ப்பை பெறுவார் எனவும் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement