இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஜனவரி 3ஆம் தேதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

INDvsRSA

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால் இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்கா அணியும் தீவிரம் காட்டும் இதன் காரணமாக நாளைய 2-வது டெஸ்ட் போட்டி கூடுதல் சுவாரஸ்யமாக அமைய உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த உத்தேச அணியை தான் நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Ashwin

அதன்படி ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணியை நிச்சயம் விராட் கோலி மாற்ற நினைக்க மாட்டார். எனவே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : புத்தாண்டின் முதல் நாளிலேயே முதல் சதம் அடித்த வீரர். அபாரமான பேட்டிங் – யார் அந்த வீரர் தெரியுமா?

1) கே.எல் ராகுல், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ஷர்துல் தாகூர், 8) அஷ்வின், 9) பும்ரா, 10) ஷமி, 11) சிராஜ்

Advertisement