புத்தாண்டின் முதல் நாளிலேயே முதல் சதம் அடித்த வீரர். அபாரமான பேட்டிங் – யார் அந்த வீரர் தெரியுமா?

Conway
- Advertisement -

மொமினுல் ஹக் தலைமையிலான வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பிறந்து முதல் போட்டியாக இந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டி ஒன்றாம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

nzvsban

- Advertisement -

அதன்படி மவுன்ட் மாங்கனியில் துவங்கிய இந்த போட்டியில் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகியோரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்சில் துவக்கம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் நான்காவது ஓவரின் 3-வது பந்தில் கேப்டன் டாம் லேதம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் 52 ரன்கள் எடுத்த நிலையில் மற்றொரு துவக்க வீரரான வில் யங் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய டேவன் கான்வே மற்றும் ராஸ் டைலர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் ராஸ் டைலர் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்து வெளியேறியதை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவன் கான்வே 227 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 122 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

conway 1

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 258 அடித்திருந்தது. இந்த புத்தாண்டு பிறந்து முதல் விக்கெட்டை கைப்பற்றிய பவுலராக வங்கதேச அணியின் பவுலர் சொரிபுல் இஸ்லாம் திகழ்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் : மீண்டும் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – கொஞ்சம் உஷாரா இருக்கனும்

அதேபோன்று முதல் செஞ்சுரி அடித்த வீரராக டேவன் கான்வே தனது சதத்தை பதிவு செய்துள்ளார். 30 வயதான இவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 501 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 சதமும், ஒரு இரட்டை சதம், இரண்டு அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement