இரண்டாவது டெஸ்ட் : மீண்டும் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – கொஞ்சம் உஷாரா இருக்கனும்

Pitch
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

siraj

அதன்படி ஜோகனஸ்பர்க் மைதானம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த பிட்ச் ரிபோட் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டாவது போட்டி நடைபெற இருக்கும் இந்த மைதானத்தை பொறுத்தவரை செஞ்சூரியன் மைதானத்தைப் போன்றே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான ஒன்றாக இருக்கக்கூடும்.

- Advertisement -

அதே வேளையில் அங்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதன் காரணமாக அதிக அளவில் பந்து ஸ்விங் ஆகும். எனவே எந்த அணியாக இருந்தாலும் சரி போட்டியின் முதல் 10 முதல் 15 ஓவர்கள் நிதானித்து விளையாட வேண்டியது அவசியம். அதேபோன்று நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானம் மிகவும் ஒத்துழைக்கும் என்று கூறப்படுகிறது.

Shami

இந்த மைதானத்தில் ஸ்விங் மற்றும் வேகம் அதிக அளவுக்கு இருக்கும் என்பதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அது கை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே தென்னாப்பிரிக்காவின் கோட்டை என்று பார்க்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்திலேயே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்தியதால் நிச்சயம் இந்த மைதானத்திலும் தங்களது பலத்தைக் காட்டுவார்கள் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : என்னை பொறுத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் இவர்தான் – அம்பத்தி ராயுடு ஓபன்டாக்

மேலும் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்ற குறையை போக்கி இம்முறை சாதனை படைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement