என்னை பொறுத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் இவர்தான் – அம்பத்தி ராயுடு ஓபன்டாக்

Rayudu
Advertisement

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சுமார் 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அளவில் இவரது திறமைக்கு மிக குறைந்த அளவிலேயே போட்டிகள் கிடைத்தாலும் ஐபிஎல் தொடரில் 175 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் நிச்சயம் பல போட்டிகளில் விளையாடிருக்க வேண்டியவர் என்று இன்றளவும் ரசிகர்களால் பார்க்கப்பட்டவர்.

rayudu

அந்த அளவிற்கு தனது பேட்டிங்கில் திறன்களை வெளிக்காட்டியவர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் மிகப்பெரிய அனுபவம் கொண்ட ராயுடு தான் பார்த்து விளையாடியதில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக அணியில் இடம் பெற்று முக்கிய வீரராக விளையாடு வரும் ராயுடு 2022-ஆம் ஆண்டுக்கான சென்னை அணியிலும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை அணியும் அம்பத்தி ராயுடுவை அணியில் எடுக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Rayudu

இந்நிலையில் இவர் தோனி குறித்து பேசுகையில் : சிஎஸ்கே அணிக்காக மட்டும் அல்ல இந்திய அணியிலும் நான் பார்த்த சிறந்த கேப்டன் அவர்தான். ஏனெனில் என்னிடம் இருக்கும் திறனை முழுமையாக வெளியில் எடுத்து வந்தது அவருடைய கேப்டன்சி தான். அவரைப்போன்ற ஒரு அருமையான கேப்டன் இருக்கும்போது வீரர்களின் திறன் களத்தில் வெளிப்படும். அந்த வகையில் ஒவ்வொரு வீரரின் திறனையும் அவர் அறிந்து வழிநடத்தினார்.

இதையும் படிங்க : என்னதான் இருந்தாலும் சிராஜ் செய்தது தவறு. அவர் பண்ணது சரியில்ல – இந்திய ரசிகர்களே காண்டாகிய சம்பவம்

நிச்சயம் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன் என்றால் அது தோனிதான் எனக் கூறியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக விஜய்சங்கர் அணியில் இணைக்கப்பட்டதால் அதிருப்தியில் ஓய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு மீண்டும் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement