என்னதான் இருந்தாலும் சிராஜ் செய்தது தவறு. அவர் பண்ணது சரியில்ல – இந்திய ரசிகர்களே காண்டாகிய சம்பவம்

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டாலும் மீதமுள்ள 4 நாட்களிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது விளையாடிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் செய்த செயல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் சற்று விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

- Advertisement -

அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 62-வது ஓவரின் போது தென் ஆப்பிரிக்கா அணியின் துணை கேப்டனான தெம்பா பவுமா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் அவர் அடித்த பந்தினை பிடித்த சிராஜ் அதனை கையில் வைத்திருக்காமல் நேராக ஸ்டம்பை நோக்கி வீசினார். அப்போது அந்த பந்து பவுமாவின் காலில் பட்டது. அந்த இடத்தில் அந்த த்ரோ தேவையில்லாத ஒன்று.

ஏனெனில் பவுமா அப்போது கிரீசை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை. பந்து தன்னை நோக்கி வருவதை எதிர்பாராத வகையில் அவர் அடி வாங்கினார். இதன் காரணமாக அடுத்த பந்திலேயே அவருக்கு பிசியோதெரபி உதவி தேவைப்பட்டது. அந்த அளவிற்கு அவர் வலியால் துடித்தார் இந்த சம்பவத்தை கண்ட நெட்டிசன்கள் தற்போது இந்த சம்பவத்தை வைரலாக்கியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா விடயத்தில் பி.சி.சி.ஐ எடுத்த சர்ப்ரைஸ் முடிவு. பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றம் – விவரம் இதோ

மேலும் இது தேவையில்லாத ஒன்று என்றும் சிராஜ் செய்தது சரியல்ல என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த துரோ அவசியமான ஒன்று கிடையாது என்றும் அதுகுறித்த விடீயோவையும் பகிர்ந்து வருகின்றனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஜனவரி 3-ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement