IND vs AUS : டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இப்படி சதம் அடிப்பது இதுவே இரண்டாம் முறையாம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தனது 27-வது சதத்தை பதிவு செய்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகாலமாக காத்திருந்த விராட் கோலி 28-வது சதத்தை எப்போது பூர்த்தி செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

kohli 1

- Advertisement -

இந்நிலையில் தனது மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இன்று அடித்த சதத்தின் மூலம் தனது 3 ஆண்டு கால காத்திருப்பை நிவர்த்தி செய்துள்ளார்.

விராட் கோலி இந்த முதல் இன்னிங்சில் மொத்தம் 364 பந்துகளை சந்தித்து 186 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளதை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சதத்தை விளாசிய விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து தனது திறனை வெளிக்கொணர்ந்துள்ளர்.

Kohli 1

இந்நிலையில் 28 டெஸ்ட் சதங்கள் விளாசிய விராட் கோலிக்கு இதுவே அவருடைய இரண்டாவது ஸ்லோவான செஞ்சுரி என்ற சாதனையையும் இந்த சதத்தின் மூலம் அவர் படைத்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 289 ந்துகளை சந்தித்து சதம் அடித்ததே அவரது மெதுவான சதமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : சச்சினுக்கு அடுத்து விராட் கோலி தான் என்பதை மீண்டும் இன்று நிரூபித்த கிங் கோலி – விவரம் இதோ

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் 241 பந்துகளை சந்தித்த அவர் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது மெதுவான சதம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சினுக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 16 சதங்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பட்டியலிலும் அவர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement