IND vs AUS : சச்சினுக்கு அடுத்து விராட் கோலி தான் என்பதை மீண்டும் இன்று நிரூபித்த கிங் கோலி – விவரம் இதோ

Sachin-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

Ashwin 2

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்த இந்திய அணியானது 521 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆனாலும் போட்டியில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சி இருப்பதால் இந்த போட்டி டிராவில் முடிவடைவே அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டர்களுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை பலமாக வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியின் மூலம் சதம் அடித்த விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது 16-வது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : இப்படி கூடவா காயமாகும்? வினோத காயத்தால் அறுவை சிகிக்சைக்கு உள்ளான தெ.ஆ வீரர் பரிதாபம் – ரசிகர்கள் வியப்பு

சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 20 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 16 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement