சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – விராட் கோலி

Kohli-and-Sachin
Advertisement

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி நேற்று தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்தநாள் அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய விராட் கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 121 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து இறுதிவரை நாட்டம் இழக்காமல் களத்தில் நின்று ரசிகர்களுக்கு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் விருந்தளித்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது.

- Advertisement -

குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி இறுதியில் 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 83 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி ருசித்தது.

அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணி என்கிற கௌரவத்தையும், புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலி அடித்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்த அவர் மேலும் ஒரு சச்சின் டெண்டுல்கரின் சாதனையுடன் இணைந்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி படைத்த சாதனை யாதெனில் : இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நேற்று கோலி அடித்த 101 ரன்கள் மூலம் விராட் கோலி இரண்டாவது இந்திய வீரராக இந்திய மண்ணில் 6000 ஒருநாள் ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : சச்சின், கிறிஸ் கெயிலை முந்திய விராட் கோலி.. ஐசிசி தொடர்களின் புதிய ஹீரோவாக உலக சாதனை

தற்போது 35 வயதான விராட் கோலி இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாடுவார் என்பதனால் நிச்சயம் அந்த சாதனையையும் விராட் கோலி தகர்த்து முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு எதிர்வரும் மூன்று போட்டிகளுக்குள் அவர் தனது ஐம்பதாவது சதத்தையும் அடிப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement