IPL 2023 : வேறுயெந்த வீரரும் படைக்காத சாதனையை ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்திய விராட் கோலி – விவரம் இதோ

Virat Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது தங்களது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

RCB vs DC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக டெல்லி அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி ஐபிஎல் தொடரில் எந்த ஒரு வீரரும் செய்யாத ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

VIrat Kohli Knock Out

அந்த வகையில் இன்றைய போட்டியில் 34 பந்துகளை சந்தித்த விராட் கோலி மற்றும் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 50 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு அவர் அடித்த இந்த 50 ரன்கள் மூலம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மட்டும் விராட் கோலி இதுவரை 2500 ஐபிஎல் ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : ரசல் காட்டடியை மீண்டும் பார்க்க கேகேஆர் அதை செய்யனும், கோலி மாதிரி 2018லயே மாஸ் காட்டுனாரு – சேவாக் கோரிக்கை

இதுபோன்று ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் எந்த ஒரு வீரரும் 2000 ரன்களை கூட அடித்தது கிடையாது. ஆனால் விராட் கோலி சின்னசாமி மைதானத்தில் 2500 ரன்களை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் இவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் அவர்களுக்கு சொந்தமான மைதானத்தில் இது போன்ற சாதனையை நிகழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement