IPL 2023 : ரசல் காட்டடியை மீண்டும் பார்க்க கேகேஆர் அதை செய்யனும், கோலி மாதிரி 2018லயே மாஸ் காட்டுனாரு – சேவாக் கோரிக்கை

Virender Sehwag.jpeg
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் மட்டும் தன்னுடைய பேட்டிங்கில் அனலை தெறிக்க விடாமல் இருந்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது. பொதுவாகவே முரட்டுத்தனமான உடம்பை கொண்ட அவர் முக்கிய நேரத்தில் களமிறங்கி யார்கார் உட்பட எப்படி பந்து வீசினாலும் காட்டுத் தனமான வேகத்தில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கி தனது அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்து ரசிகர்களுடைய புகழ் பெற்றவர்.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் 2018 முதல் கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடம் 16 கோடி என்ற உச்சகட்ட சம்பளத்திற்கு தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் 35 (19), 0 (1), 1 (2), 3 (6) என குறைவான ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்து வருகிறார். குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டிக்கு பின் லேசான காயத்தை சந்தித்த அவர் தொடர்ந்து 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார்.

- Advertisement -

சேவாக் கோரிக்கை:
அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்திய அவர் அடுத்த ஓவரில் காலில் காயத்தை சந்தித்தால் மேற்கொண்டு விளையாடவில்லை. அந்த நிலையில் பேட்டிங்கில் கொல்கத்தா தடுமாறிய போது காயத்துடனேயே களமிறங்கிய அவர் லெக் ஸ்பின்னர் மயங் மார்கண்டேவுக்கு எதிராக அவுட்டானார்.

அப்படி காயத்தால் தடுமாறும் அவர் பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினாலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுவதை வழக்கமாக வைத்துள்ளதால் ஏன் ஓப்பனிங் இடத்தில் விளையாட கூடாது? என்று முன்னாள் வீரர் ரோஹன் கவாஸ்கர் கிரிக்பஸ் இணையத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு 2018லயே ஓப்பனிங் இடத்தில் விளையாடுமாறு தாம் கொடுத்த ஆலோசனையை கேட்டு ரசல் சரவெடியாக செயல்பட்டதாக அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரேந்திர சேவாக் தெரிவித்தார்.

- Advertisement -

குறிப்பாக சேஸ் மாஸ்டராக இருக்கும் விராட் கோலி ஃபினிஷிங் செய்ய முடியும் என்றாலும் ஓப்பனிங் வீரராக விளையாடுவது போல் காயத்தை தவிர்த்து வெற்றிகரமாக செயல்பட ரசல் ஓப்பனிங் இடத்தில் விளையாடும் முடிவை கொல்கத்தா அணி நிர்வாகம் தான் எடுக்க வேண்டும் என்று சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2018ஆம் ஆண்டு ரசலிடம் நான் இதைத்தான் சொன்னேன். அதாவது நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன். ஒருவேளை ஓப்பனிங் இடத்தில் உங்களால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தால் பின்னர் நீங்கள் மில்லியன் டாலர் வீரராக உருவெடுப்பீர்கள் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்”

“அவரும் அதை செய்தார். அதாவது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஓப்பனிங் வீரராக களமிறங்கி சதமடித்த அவர் நீங்கள் சொன்னது போலவே நடைபெற்றது என எனக்கு மெசேஜ் செய்தார். ஆனால் அத்தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டதால் ரிஸ்க் எடுத்து தொடக்க வீரராக களமிறங்கும் முடிவை தமக்குத் தாமே எடுத்து வெற்றிகரமாக செயல்பட்டார். ஆனால் இங்கே கொல்கத்தா அணியில் அதை அவர் செய்ய முடியுமா? ஏனெனில் இது கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவாகும்”

இதையும் படிங்க:RCB vs DC : கொஞ்சம் கூட முன்னேறாமல் அதே தவறை செய்த டெல்லி – 10 வருடத்துக்கு பின் மோசமான சாதனை, ஆர்சிபி வென்றது எப்படி

“அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஸ்பின்னர்களுக்கு எதிராகவே தடுமாறுகிறார். ஆனால் அவர் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றால் முன்கூட்டியே செட்டிலாகி அதிக பந்துகளை எதிர்கொண்டு இன்னும் ஆபத்தாக விளையாடுவார். இங்க சேஸ் மாஸ்டர் யார்? விராட் கோலி. அவர் ஆர்சிபி அணியில் எங்கே விளையாடுகிறார்? அவரால் பினிஷிங் செய்ய முடியாதா? அதே போலவே ரசல் தொடக்க வீரராக விளையாட முடியும். ஆனால் அதற்கான ரிஸ்க் முடிவை கொல்கத்தா எடுக்க வேண்டும். குறிப்பாக அவரால் புதிய பந்தில் தாக்குப் பிடிக்க முடியுமா? ஒருவேளை முடிந்தால் ரசலை தொடக்க வீரராக முயற்சிக்கலாம்” என்று கூறினார்.

Advertisement