RCB vs DC : கொஞ்சம் கூட முன்னேறாமல் அதே தவறை செய்த டெல்லி – 10 வருடத்துக்கு பின் மோசமான சாதனை, ஆர்சிபி வென்றது எப்படி

DC vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 20வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அதில் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்த டெல்லி நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (16) ரன்கள் குவித்த கேப்டன் டு பிளேஸிஸ் 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவருடன் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டு 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 50 (34) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே மஹிபால் லோம்ரரும் 2 சிக்சருடன் 26 (18) ரன்களில் நடையை கட்டினார். அந்த நிலையில் வந்த ஹர்சல் படேல் 6 (4) ரன்களிலும் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயற்சித்து 3 சிக்சருடன் 24 (14) ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். போதாகுறைக்கு தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டானதால் 150 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட பெங்களூருவுக்கு கடைசி நேரத்தில் சபாஷ் அகமது 3 பவுண்டரிகளுடன் 20* (12) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்ற அனுஜ் ராவத் 15* (22) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

டெல்லியின் பழைய தவறு:
அதனால் 20 ஓவர்களில் பெங்களூரு 174/6 ரன்கள் குவித்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 175 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா முதல் ஓவரிலேயே 0 (2) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். போதாக்குறைக்கு அடுத்து வந்த யாஷ் தூள் 1 (4) ரன்னில் அவுட்டாகி செல்ல மறுபுறம் நங்கூரத்தை போட முயன்ற டேவிட் வார்னரும் 19 (13) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 30/4 என ஆரம்பத்திலேயே மோசமான தொடக்கத்தை பெற்ற டெல்லியை மீட்டெடுக்கப் போராடிய அபிஷேக் போரேல் 5 (8) நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேல் 21 (14) என முக்கிய வீரர்களும் பெங்களூருவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் தனி ஒருவனாக போராடிய மனிஷ் பாண்டேவும் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (38) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தால் டெல்லியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது.

- Advertisement -

இறுதியில் ஆவேஷ் கான் 18 (10), லலித் யதாவ் 4 (7), ஆன்றிச் நோர்ட்ஜெ 23* (14), குல்தீப் யாதவ் 7* (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி பரிதாபமாக தோற்றது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக விஜயகுமார் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

முன்னாதாக பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்க்கு சாதகமானது என்பதை அனைவரும் அறிவோம். அது போக பகல் நேரப் போட்டியில் எப்போதுமே பனியின் தாக்கம் இருக்காது என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயமாக நல்ல ரன்களை எடுத்து ஓரளவு சிறப்பாக பந்து வீசினால் வெற்றி எளிதாக கிடைக்கும். அந்த வாய்ப்பை டாஸ் வென்று தேர்ந்தெடுக்காத டெல்லி பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் மீண்டும் சொதப்பி 5வது தோல்வியை பதிவு செய்தது.

இதையும் படிங்க:IPL 2023 : அதுக்குள்ள தோனி, கோலியாகிட முடியுமா? வளர்ந்த பின் அதை செய்ங்க – இளம் இந்திய வீரருக்கு மஞ்ரேக்கர் முக்கிய அட்வைஸ்

குறிப்பாக கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராக மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்த டெல்லி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் கங்குலி – பாண்டிங் ஆகியோர் பயிற்சியாளர்களாக இருந்தும் அந்த தோல்வியிலிருந்து கொஞ்சம் கூட பாடத்தை கற்காத டெல்லி மீண்டும் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் மோசமாக செயல்பட்டு 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இப்போதே 50% கோட்டை விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement