IPL 2023 : அதுக்குள்ள தோனி, கோலியாகிட முடியுமா? வளர்ந்த பின் அதை செய்ங்க – இளம் இந்திய வீரருக்கு மஞ்ரேக்கர் முக்கிய அட்வைஸ்

Sanjay
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டியில் 3 வெற்றியை பதிவு செய்து டாப் 4 இடத்திற்குள் ஜொலித்து வருகிறது. அந்த அணிக்கு கடந்த வருடம் அதிக ரன்கள் (483) குவித்த வீரராக சாதனை படைத்து முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் இந்த சீசனிலும் இதுவரை 4 போட்டிகளில் 183 ரன்களை 141.86 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வெற்றிகளில் சிறப்பான பங்காற்றி வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் தொடர் நாயகன் விருது வென்று மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் எடுத்து சமீப காலங்களாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார்.

Gill

- Advertisement -

இருப்பினும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக நின்று 67 (49) ரன்கள் குவித்த அவர் கடைசி ஓவரில் அவுட்டாகி குஜராத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கினார். நல்லவேளையாக கடைசி ஓவரில் ராகுல் திவாடியா பவுண்டரி அடித்து குஜராத்தை வெற்றி பெற வைத்தார். ஆனால் 10 ஓவர்களுக்கு மேல் நன்கு செட்டிலாகியும் அதிரடியை துவக்காத சுப்மன் கில் சுயநலத்துடன் 40 பந்துகளில் அரை சதமடித்த பின்பே வேகமாக விளையாட முயற்சித்ததாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்தார்.

மஞ்ரேக்கர் அட்வைஸ்:
மேலும் 17வது ஓவரிலேயே முடிய வேண்டிய போட்டியை இப்படி சொந்த சாதனைகளுக்காக தாமதமாக விளையாடினால் ஒருநாள் கிரிக்கெட் உங்களுடைய கன்னத்தில் அறையும் என்று சேவாக் சரமாரியாக விமர்சித்தார். அத்துடன் அப்படி கடைசி ஓவர் வரை போட்டி செல்வதை தாம் விரும்பவில்லை என்று ஹர்டிக் பாண்டியாவும் மறைமுகமாக விமர்சித்தார். இந்நிலையில் நன்கு செட்டிலாகி விட்டதால் 18வது ஓவரிலேயே அப்போட்டியை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் ஒருவேளை நீங்கள் கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்ல விரும்பினால் தோனியை போல் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்திருக்க வேண்டும் என்று சுப்மன் கில்லுக்கு ஆலோசனைக் கொடுத்துள்ளார்.

Gill 1

அத்துடன் இளம் வீரராக இருக்கும் நீங்கள் இன்னும் அனுபவத்தைக் பெறாத காரணத்தால் இப்போதே தோனி விராட் கோலி போல ஃபினிஷிங் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் வருங்காலங்களில் அதை செய்யும் அளவுக்கு அவரிடம் திறமை இருப்பதாக பாராட்டும் மஞ்ரேக்கர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “வெற்றி பெற்றாலும் தங்களுடைய பலவீனங்களை பற்றி கவலைப்பட்டு அதில் முன்னேறுவதே சாம்பியன் அணிகளாகும். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நல்ல பிட்ச்சில் 5 பவுலர்களுடன் மட்டும் விளையாடக்கூடாது என்ற பாடம் குஜராத்துக்கு கிடைத்தது”

- Advertisement -

அதே போலவே இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் செட்டிலாகி விட்டால் அவர் 18 – 19வது ஓவரில் போட்டியை ஃபினிஷிங் செய்ய முயற்சிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்ல விரும்பினால் தோனியை போல் பொறுமையை காட்டி அவுட்டாகாமல் நில்லுங்கள். அதனால் போட்டியை ஏன் கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றீர்கள் என சுப்மன் கில்லிடம் குஜராத் அணி நிர்வாகம் கேள்வி எழுப்பும் என்று நினைக்கிறேன். அந்த போட்டியில் சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோருடைய ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் குறைவாக இருந்தது”

Sanjay

“எனவே அவர் மிகவும் இளமையானவர் என்பதை நாம் மறக்க கூடாது. அற்புதமான திறமை இருப்பதால் நாம் அவரிடம் பெரியவற்றை எதிர்பார்க்கிறோம். டெத் ஓவர்களில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் நிறைய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். கடைசி வரை எப்படி நின்று ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை கோலி அறிவார்”

இதையும் படிங்க:IPL 2023 : சொந்த சாதனைகளுக்காக சுயநலமா விளையாடாதீங்க – சைமன் டௌல் விமர்சனத்துக்கு விராட் கோலியின் பதில் இதோ

“தோனி தன்னுடைய மொத்த வாழ்நாளையும் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்வதில் கழித்துள்ளார். இருப்பினும் கில்லுக்கு அந்த வாய்ப்பு இன்னும் அதிகமாக கிடைக்கவில்லை. இருப்பினும் மிகவும் திறமையான வீரரான அவர் 70 ரன்களில் அவுட்டாகாமல் இருப்பது தம்முடைய மதிப்பை அதிகப்படுத்தும் என்பதை அறிவார்” என்று கூறினார்.

Advertisement