நான் பேன்சியான ஷாட்டை எல்லாம் பெருசா ஆட மாட்டேன். ஏன் தெரியுமா? – விராட் கோலி கொடுத்த விளக்கம்

Kohli
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது கிளாஸனின் சிறப்பான சதம் காரணமாக 186 ரன்கள் குவித்தது.

Klaasen 1

- Advertisement -

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 19.2 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அசத்தலான வெற்றியை பெற்றது.

அதோடு மட்டுமின்றி பிளே ஆப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது 187 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை துரத்திய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

Virat Kohli Faf Du Plessis

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி தனது பேட்டிங் டெக்னிக் குறித்த சில கருத்துக்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே பேன்சியான ஷாட்களை விளையாடுவது கிடையாது. ஏனெனில் நான் பேன்சியான ஷாட்டுகளை விளையாடி அதன் மூலம் எளிதாக விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டேன்.

இதையும் படிங்க : IPL 2023 : ஹைதெராபாத் – ஆர்சிபி போட்டியில் 15 வருட ஐபிஎல் வரலாற்றில் 1022 போட்டிகளில் முதல் முறையாக நிகழ்ந்த அரிய நிகழ்வு

அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வர இருப்பதால் என்னுடைய டெக்னிக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ப்ராப்பரான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடி வருகிறேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement