IPL 2023 : ஹைதெராபாத் – ஆர்சிபி போட்டியில் 15 வருட ஐபிஎல் வரலாற்றில் 1022 போட்டிகளில் முதல் முறையாக நிகழ்ந்த அரிய நிகழ்வு

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பெங்களூரு தோற்றால் சென்னை, லக்னோ ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உருவானது. அதே போல மும்பையின் கனவும் அதிகரிக்கும் என்பதால் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வாழ்வா – சாவா என்ற வகையில் அந்தப் போட்டியில் ஹென்றிச் க்ளாஸென் சதமடித்து 104 (51) ரன்கள் எடுத்த உதவியுடன் ஹைதராபாத் 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பெங்களூருவுக்கு ஆரம்பம் முதலே நங்கூரமாகவும் அதிரடியாகும் செயல்பட்டு 172 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 100 (63) ரன்களும் கேப்டன் டு பிளேஸிஸ் 71 (47) ரன்களும் எடுத்து 19.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துக் கொண்டதால் சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

- Advertisement -

அரிய நிகழ்வு:
அப்படி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்காக ஏனைய வீரர்கள் தடுமாற்றமாக செயல்பட்ட போது அட்டகாசமாக பேட்டிங் செய்த ஹென்றிச் க்ளாஸென் தனி ஒருவனாக 8 பவுண்டரி 6 சிக்சருடன் தன்னுடைய முதல் ஐபிஎல் சதமடித்து 104 (51) ரன்கள் விளாசி போராடினார். குறிப்பாக அவருடைய ஃபுட் வொர்க் அபாரமாக இருந்ததாக இந்திய ஜாம்பவான் சச்சினும் சுழல் பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் மனதார பாராட்டினர்.

ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி விருந்து படைத்த விராட் கோலி சிக்சருடன் சதமடித்து பெங்களூருவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது என்று ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற இரட்டை சாதனைகளை படைத்தார். மொத்தத்தில் இப்போட்டியில் மோதிய ஹைதராபாத் மற்றும் பெங்களூரு இரு அணிகளிலும் குறைந்தது ஒரு பேட்ஸ்மேன்கள் சதமடித்தனர்.

- Advertisement -

இதில் ஆச்சரியப்படும் புள்ளிவிவரம் என்னவெனில் ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் களமிறங்கிய இரு அணிகளிலும் குறைந்தது ஒரு பேட்ஸ்மேன்கள் சதமடிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2008இல் துவங்கப்பட்டு கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் கண்டுள்ள ஐபிஎல் தொடரின் 1000வது போட்டி கடந்த ஏப்ரம் 30ஆம் தேதி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. அந்த வகையில் 15 வருட ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் நடைபெற்ற 1022 போட்டிகளில் எப்போதுமே களமிறங்கிய இரு அணிகளும் குறைந்தது ஒரு சதத்தை அடித்ததில்லை.

சொல்லப்போனால் 2016இல் பெங்களூரு மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி (109), ஏபி டீ வில்லியர்ஸ் (129*) 2019இல் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் ஜானி பேர்ஸ்டோ (114) டேவிட் வார்னர் (100*) என ஒரு அணிக்காக 2 பேட்ஸ்மேன்கள் ஒரே போட்டியில் சதங்களை அடித்துள்ளனர். ஆனால் தற்போது 16வது வருடத்தை தொட்டுள்ள ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் குறைந்தது ஒரு சதமடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:IPL 2023 : கிழிந்த ஹைதராபாத் முகத்திரை, அந்த இந்திய வீரர் பிளேயிங் லெவனில் விளையாட தகுதியானவர் ஆனா – மார்க்ரம் பேட்டி

அப்படி அரிதான நிகழ்வு அரங்கேறிய இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அடுத்ததாக குஜராத்துக்கு எதிராக நடைபெறும் தனது கடைசி போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement