IPL 2023 : கிழிந்த ஹைதராபாத் முகத்திரை, அந்த இந்திய வீரர் பிளேயிங் லெவனில் விளையாட தகுதியானவர் ஆனா – மார்க்ரம் பேட்டி

Markram
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தை தோற்கடித்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு அசத்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் சதமடித்து 104 (51) ரன்கள் குவித்த அதிரடியில் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்திய பெங்களூருவுக்கு 17 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி சதமடித்து 100 (63) ரன்களும் டு பிளேஸிஸ் 71 (47) ரன்களும் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

மறுபுறம் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதெராபாத் 13 போட்டிகளில் 9வது தோல்வியை பதிவு செய்த புள்ளி பட்டியலில் வலுவாக கடைசி இடத்தை பிடித்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. முன்னதாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் இளம் வீரர் உம்ரான் மாலிக் இந்த சீசனில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுத்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பெரும்பாலானவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் 2021 சீசனில் அறிமுகமாகி ஓரிரு போட்டிகளில் விளையாடி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி போன்றவர்களின் பாராட்டுகளை பெற்ற உம்ரான் மாலிக்கை மீண்டும் ஹைதராபாத் தக்க வைத்தது.

- Advertisement -

கிழித்த மார்க்ரம்:
அந்த நிலையில் 2022 சீசனில் முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் 145 – 150 கி.மீ என முன்பை விட அதிரடியான வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்க விட்டு 22 விக்கெட்களை வீழ்த்தி அசத்தலாகவே செயல்பட்டார். அதன் காரணமாக இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசி ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்ற சில யுக்திகளை கற்றுக்கொண்டு சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றி சிறப்பாக பந்து வீசிய அவர் குறைந்த ரன்களை மட்டும் கொடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேக பந்தை வீசிய இந்தியராக சாதனை படைத்தார்.

- Advertisement -

அதனால் நல்ல பயிற்சியும் ஆதரவு கொடுத்தால் பெரிய அளவில் சாதிப்பேன் என்பதை நிரூபித்த அவரிடம் கற்பித்தால் கூட கிடைக்காத அதிவேகம் இயற்கையாக இருப்பதால் சரியாக பயன்படுத்துமாறு அஜய் ஜடேஜா, ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இந்த சீசனில் ஆரம்பகட்ட போட்டிகளில் ரகளை வாரி வழங்கிய அவரை ஜாம்பவான் டேல் ஸ்டைனை பயிற்சியாளராக வைத்துள்ள ஹைதராபாத் நிர்வாகம் தேவையான பயிற்சிகளை கொடுத்து வழி காட்டாமல் கழற்றி விட்டுள்ளது.

அதனால் இத்தொடரின் வேகமான பவுலரை சரியாக பயன்படுத்தாத உங்களுக்கு எப்படி வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் விமர்சித்தார். அதே போல உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜஹீர் கான் நேற்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்படி முன்னாள் வீரர்களின் அடுத்தடுத்த விமர்சனங்களால் நேற்றைய பெங்களூருவுக்கு எதிரான போட்டி துவங்குவதற்கு முன்பாக உம்ரான் மாலிக் ஏன் விளையாடவில்லை என கேப்டன் மார்க்ரமிடம் வர்ணையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

அதற்கு உம்ரான் மாலிக் 11 பேர் அணியில் விளையாட தகுதியானவர் என்றாலும் ஏன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார் என்பது தமக்கு தெரியவில்லை என அவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையாக அது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய அவர் துருப்பு சீட்டு வீரர் என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க:RCB vs SRH : இவர்கூட விளையாடும் போது டிவில்லியர்ஸ் கூட விளையாடுறது மாதிரியே இருக்கு – விராட் கோலி புகழாரம்

“ஆனால் அவரது தேர்வில் அணியின் பின்புறத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவர் துருப்புச் சீட்டு வீரர் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறி ஹைதராபாத் நிர்வாகத்தின் முகத்திரையை கிழித்தார். அப்படி கேப்டன் விரும்பியும் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கொடுக்காத ஹைதராபாத் நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்களும் விளாசி வருகின்றனர்.

Advertisement