RCB vs SRH : இவர்கூட விளையாடும் போது டிவில்லியர்ஸ் கூட விளையாடுறது மாதிரியே இருக்கு – விராட் கோலி புகழாரம்

Kohli-and-ABD
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான 65-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி பிளே ஆப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பையும் பிரகாசப்படுத்தி உள்ளது.

RCB vs SRH

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியானது க்ளாஸனின் அற்புதமான சதம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 172 குவித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக விராட் கோலி 100 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 71 ரன்களையும் குவித்தனர்.

Kohli

அவர்களது அந்த முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பே பெங்களூரு அணியின் வெற்றியை செய்தது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் விராட் கோலி, கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் உடன் அமைத்த பாட்னர்ஷிப் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நாங்கள் இருவரும் இணைந்து இந்த தொடரில் 900 ரன்கள் அடித்துள்ளோம்.

- Advertisement -

அவருக்கும் எனக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருக்கிறது. நான் ஏ.பி.டி உடன் இணைந்து விளையாடும் போது எந்த மாதிரியான உணர்வு இருக்குமோ அதே போன்று டூபிளெஸ்ஸிஸ் உடன் விளையாடும் போதும் நல்ல உணர்வு இருக்கிறது. நாங்கள் இருவருமே போட்டியை புரிந்து கொண்டு விளையாடுகிறோம்.

இதையும் படிங்க : வீடியோ : இந்த செல்பிஷ் போதுமா? சைமன் டௌல், சஞ்சய் மஞ்ரேகருக்கு மாஸ் பதிலடி கொடுத்த விராட் கோலி – நடந்தது என்ன

அதோடு சர்வதேச அளவில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட டூப்ளிசிஸ் எங்களது அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே கோணத்தில் யோசிப்பதனாலே எங்களால் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட முடிகிறது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement