100 ஆவது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு மைல்கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மொகாலியில் நாளை மறுதினம் மார்ச் 4-ஆம் தேதி தொடங்க உள்ளது.

avesh khan

- Advertisement -

இந்த முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்த முதலாவது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இன்று காலி மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்பட்ட வேளையில் பலரும் இந்த போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலுவாக எழுப்பியதால் பிசிசிஐ மற்றும் மொகாலி கிரிக்கெட் நிர்வாகம் ஆகியவை சேர்ந்து அரசு ஆணைக்கிணங்க 50 சதவீத பார்வையாளர்களை இந்த போட்டியில் நேரடியாக கண்டுகளிக்க அனுமதி வழங்கியது.

100வது போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலி இந்திய அணி சார்பாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற 12-வது வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், கும்ப்ளே, கபில்தேவ், கவாஸ்கர், வெங்க்சர்கார், இஷாந்த் சர்மா, ஹர்பஜன்சிங், சேவாக், கங்குலி ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர்.

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஒரு மைல் கல்லை எட்ட காத்திருக்கிறார். அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 38 ரன்களை எடுக்கும் பட்சத்தில் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார். அதோடு அவர் முதல் இன்னிங்சில் இந்த 38 ரன்களை விளாசினால் இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த 5வது வீரர் என்ற சாதனையில் இடம் பிடிப்பார்.

இதையும் படிங்க : குஜராத் அணியிலிருந்து வெளியேறிய ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக அவரின் நிரப்ப தகுதியுள்ள – 5 வீரர்கள் இதோ

இவருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 154 இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். தற்போது 167 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி இன்னும் 38 ரன்களை அடிக்கும் பட்சத்தில் 168 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை விளாசி அதிவேகமாக 8000 ரன்களை அடித்து இந்திய வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement