குஜராத் அணியிலிருந்து வெளியேறிய ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக அவரின் நிரப்ப தகுதியுள்ள – 5 வீரர்கள் இதோ

Roy-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் வீரர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக இம்முறை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் மட்டும் ஐபிஎல் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களிலும் நாக்-அவுட் சுற்று போட்டிகள் அகமதாபாத் நகரிலும் நடைபெற உள்ளது. மேலும் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அனைத்து 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

roy

- Advertisement -

திடீரென விலகிய ஜேசன் ராய்:
இதை அடுத்து வரும் மார்ச் 26ஆம் தேதி அன்று துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. அதன்பின் 2 மாதங்கள் நடைபெற உள்ள இந்த தொடர் வரும் மே 29ம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாட இங்கிலாந்தின் நட்சத்திர அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் 2 கோடி சம்பளத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் ஐபிஎல் துவங்க ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதற்காக ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தாலும் அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்ய குஜராத் அணிக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் அவரின் இடத்தை நிரப்ப தகுதியான ஒரு சில வீரர்களை பற்றி பார்ப்போம்.

wade 1

1. மேத்தியூ வேட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் கடந்த பல வருடங்களாக மிக சிறப்பாக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் மேத்தியூ வேட் கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரராக விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் ஷாஹின் அப்ரிடியை பட்டையை கிளப்பிய அவர் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் காரணமாக குஜராத் அணியால் வாங்கப்பட்ட இவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவத்தை கொண்டுள்ளதால் தற்போதைய நிலைமையை சமாளிக்க எந்தவித தயக்கமுமின்றி இவரை ஓபனிங் வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் களமிறக்கலாம்.

Saha

2. ரிதிமான் சஹா: சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள 37 வயது நிரம்பிய ரித்திமான் சாஹா டி20 கிரிக்கெட்டில் ஓரளவுக்கு அதிரடியாக விளையாடக் கூடியவர். குறிப்பாக கடந்த சீசன்களில் ஹைதராபாத் அணிக்காக அவ்வப்போது டேவிட் வார்னருடன் ஓப்பனிங்கில் களமிறங்கிய அவர் அதிரடியாக ரன்களை குவித்து தம்மாலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முடியும் என நிரூபித்துள்ளார். எனவே மேத்தியூ வேட் மிடில் ஆர்டரில் விளையாடட்டும் என குஜராத் அணி நிர்வாகம் நினைத்தால் இவரை ஓப்பனிங்கில் களம் இறக்கலாம்.

- Advertisement -

3. மார்ட்டின் கப்டில்: 75 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்ற நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் இந்த முறை எந்த அணிக்காகவும் விளையாட ஒப்பந்தம் ஆகவில்லை. இருப்பினும் நியூசிலாந்து அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வரும் இவர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் கடந்த பல வருடங்களாக ஓப்பனிங்கில் களமிறங்கி ஏகப்பட்ட அனுபவம் கொண்டுள்ள இவர் ஜேசன் ராய் இடத்தில் விளையாட தகுதியானவராக தென்படுகிறார். எனவே அவருக்கு பதில் இவரை மாற்று வீரராக வாங்கி ஓப்பனிங் இடத்தில் குஜராத் அணி நிர்வாகம் விளையாட வைத்தால் அது தவறான முடிவாக இருக்காது.

lynn1

4. கிறிஸ் லின் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் லின் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக சாதனை படைத்தார். அந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க தடுமாறியதால் தற்போது ஐபிஎல் தொடரில் காணாமல் போயுள்ளார். ஆனாலும் கூட பிக்பேஷ், பிஎஸ்எல் போன்ற டி20 தொடரில் அதிரடி காட்டும் இவரையும் குஜராத் வாங்கி தங்கள் அணியில் விளையாட வைத்தால் அது ஒரு சரியான முடிவாகவே இருக்கும்.

- Advertisement -

5. பால் ஸ்டிர்லிங்: அயர்லாந்து கண்ட மகத்தான அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் பால் ஸ்டெர்லிங் கடந்த பல வருடங்களாக அந்த அணியின் தொடக்க வீரராக பல சாதனைகளை படைத்துள்ளார். கத்துக்குட்டி நாட்டில் விளையாடுகிறார் என்பதால் பொதுவாகவே இவரால் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் கவனம் ஈர்க்க முடிவதில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடருக்காக நீங்க இப்படி செய்யறது நியாயமில்லை. ஆஸி லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய – மேத்யூ ஹைடன்

அதன் காரணமாகவே இந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்காத நிலையில் நிறைய திறமைகள் கொண்டுள்ள இவர் ஒரு அண்டர் ரேட்டட் வீரராக கருதப்படும் இவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்க தகுதியானவராக உள்ளார்.

Advertisement