ஐபிஎல் தொடருக்காக நீங்க இப்படி செய்யறது நியாயமில்லை. ஆஸி லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய – மேத்யூ ஹைடன்

Hayden
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரை இந்தியாவிலேயே நடத்துவதற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரை வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடத்த உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுப்போட்டிகள் மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 முக்கியமான மைதானங்களில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் பைனல் உள்ளிட்ட பிளே-ஆப் சுற்றுக்கு போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இதை அடுத்து வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கும் ஐபிஎல் 2022 தொடர் 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின்னர் மே 29ஆம் தேதியுடன் நிறைவுக்கு பெறவுள்ளது.

ipl

- Advertisement -

நாட்டை புறக்கணிக்கும் வீரர்கள்:
ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளதால் வழக்கத்திற்கு மாறாக இந்த அனைத்து அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகளில் மோத உள்ளன.

பொதுவாகவே வெறும் 2 மாதங்கள் மட்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நாட்டுக்காக ஒரு வருடம் விளையாடினால் கிடைக்கும் சம்பளத்தைவிட வெறும் 2 மாதத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் சமீப காலங்களாக தங்கள் நாட்டுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பல வீரர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

aus

கொந்தளிக்கும் மேத்யூ ஹெய்டன்:
அதில் முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற ஒரு சில நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இறுதியாக நடைபெற உள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் ஓய்வு அளித்துள்ளது. இதனால் முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் எந்தவித தடையுமின்றி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடருக்காக தாய்நாட்டு கிரிக்கெட்டை புறக்கணிப்பது சரியானதல்ல என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கொந்தளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நமக்கு தெரியும். ஆனால் அதன் அட்டவணை காரணமாக கிரிக்கெட் வாரியங்களும், வீரர்களும் சிரமப்படுகிறார்கள். நீங்கள் ஐபிஎல் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு விளையாட மறுத்தால் அதில் பிரச்சனை உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு விளையாடாமல் போகும் உங்களுக்கு முழு சம்பளம் தர முடியாது. மேலும் அதுபோன்ற நேரங்களில் அவர்கள் சம்பளத் தொகையை தியாகம் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

aus

அதாவது ஐபிஎல் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு விளையாட மாட்டேன் எனக் கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என கொந்தளித்துள்ள ஹெய்டன் நாட்டுக்காக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடிக்க வேண்டும் என அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

நீங்கள் விளையாடினீர்களே:
இப்படி அவர் கூறுவதை பார்த்த பல ரசிகர்கள் நீங்களும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினீர்களே என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் மேத்யூ ஹெய்டன் பேசியது பின்வருமாறு. “ரசிகர்கள் அனைவரும் நான் ஐபிஎல் தொடரில் விளையாடியது பற்றி பேசுகிறார்கள். அது உண்மையே, ஆனால் நான் எப்போதும் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை பாதிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை.

மேலும் எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு விளையாட நான் காத்திருந்ததில்லை. ஏனெனில் அந்த அணியில் விளையாட நான் 7 வருடங்கள் காத்திருந்தேன்” என தேசப்பற்றுடன் கூறினார். என்னதான் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கப்பெற்றாலும் அதற்காக தாய்நாட்டுக்காக விளையாடாமல் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க : கோலியின் 100வது டெஸ்ட் : ரசிகர்களின் தொடர் கோரிக்கையால் முடிவை பின்வாங்கிய பி.சி.சி.ஐ – வெளியான நற்செய்தி

எனவே அவர் கூறுவது போல எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களாக இருந்தாலும் முதலில் தாய் நாட்டுக்காக விளையாடி அதன் பின் நேரம் இருந்தால் மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதே சரியான முடிவாகும். ஏனெனில் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடியே தீர வேண்டுமென இந்தியாவில் இருந்து யாரும் எந்த ஒரு வெளிநாட்டு வீரரையும் கட்டாயப் படுத்துவதில்லை.

Advertisement