பேருக்கு தான் சீனியர் பிளேயர்.. ஆனா 25 வயசு இளம் வீரர் மாதிரி கலக்குறாரு.. சோயப் மாலிக் பாராட்டு

Shoaib Malik 3
- Advertisement -

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லாமல் ஓய மாட்டோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக நெதர்லாந்தை தவிர்த்து எஞ்சிய அணிகளை அடித்து நொறுக்கி மிரட்டலை கொடுத்து வந்த தென்னாபிரிக்கா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியையும் கொல்கத்தாவில் 326 ரன்கள் அடித்து பின்னர் 83 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சதமடித்து 101* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

25 வயசு பையன்:
அதை விட தம்முடைய பிறந்தநாளில் உலகக்கோப்பை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (தலா 49) வாழ்நாள் சாதனையையும் 35 வயதிலேயே சமன் செய்தார். இந்நிலையில் 35 வயதாகும் விராட் கோலி 25 இளம் வீரரை போல் அபாரமான ஃபிட்னெஸை கடைப்பிடிப்பதே இந்த சாதனைகளுக்கு காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பாராட்டுவதற்கான வார்த்தைகள் இல்லை. அவர் மகத்தான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்று சமன் செய்ததில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அதை விட அவர் அடித்த சதங்களில் பெரும்பாலான போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது என்பதே முக்கியமானதாகும். பொதுவாகவே சதமடிப்பது பெரிய விஷயமாகும்”

- Advertisement -

“அதற்கான பாராட்டுகளை நீங்கள் கொடுக்க வேண்டும். ஆனால் சதத்துடன் சேர்த்து உங்களுடைய அணியும் வென்றால் அதை விட மகிழ்ச்சி இருக்க முடியாது. சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்துவது விராட் கோலியின் மற்றொரு சிறப்பம்சமாகும். அவருடைய ஃபிட்னஸ் அடுத்த லெவலில் இருக்கிறது. இன்று அவர் 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் அவர் ரன்களை எடுப்பதற்காக ஓடும் போது 25 வயதுடையவரைப் போல் தெரிகிறார்”

இதையும் படிங்க: சச்சின் சாதனையை விராட் கோலி சமன் செய்யனும்னு எந்த அவசியமும் இல்ல.. பாண்டிங் வித்யாச கருத்து

“எனவே ஃபிட்னஸ் என்பது மிகவும் முக்கியமாகும். அதனாலேயே விராட் கோலி தொடர்ச்சியாக அசத்துகிறார். அதன் காரணமாகவே அவர் பேட்டிங் செய்த பின்பும் 50 ஓவர்கள் முழுமையாக அதுவும் முக்கியமான இடங்களில் ஃபீல்டிங் செய்கிறார். விராட் கோலி போல நல்ல ஃபிட்னஸ் கடை பிடித்தால் மட்டுமே அதை உங்களால் செய்ய முடியும்” என்று கூறினார்.

Advertisement