சச்சின் சாதனையை விராட் கோலி சமன் செய்யனும்னு எந்த அவசியமும் இல்ல.. பாண்டிங் வித்யாச கருத்து

Ricky Ponting
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 543 ரன்களை 108.60 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார். அந்த வகையில் பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய தன்னைச சாம்பியன் வீரர் என்பதையும் நவீன கிரிக்கெட்டின் நாயகன் என்பதையும் நிரூபித்து வருகிறார்.

குறிப்பாக வலுவான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் மிகவும் சவாலான பிட்ச்சில் 101* ரன்கள் குவித்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் தம்முடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:
அந்த வகையில் கிரிக்கெட்டின் ஆல் டைம் மகத்தான வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 35 வயதிலேயே சமன் செய்த விராட் கோலி பலரது பாராட்டுக்கள் பெற்று வருகிறார். ஆனால் சாதனையை சமன் செய்தாலும் சச்சினுக்கு நிகரானவன் கிடையாது என்று தெரிவித்த விராட் கோலி அவர் தான் தமக்கு எப்போதும் ஹீரோ என்றும் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் சச்சினை விட 175 இன்னிங்ஸ் குறைவாக 49 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி அவரை சாதனையை சமன் செய்யவில்லை என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மாறாக யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை விராட் கோலி அசால்ட்டாக படைத்து வருவதாக பாராட்டும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை என்பதை நான் நீண்ட காலத்திற்கு முன்பே சொல்லி விட்டேன். உண்மையாகவே சச்சினின் சாதனையை சமன் செய்ய அவருக்கு எந்த தேவையுமில்லை. யாருடைய சாதனையை உடைப்பதற்கான அவசியமும் இல்லை. ஏனெனில் அவருடைய ஒட்டுமொத்தமான சாதனைகளை பார்க்கும் போது அபாரமாக இருக்கிறது. குறிப்பாக சச்சின் அடித்த 49 சதங்களை 175 இன்னிங்ஸ் குறைவாக விராட் கோலி அடித்துள்ளார் என்பது நம்ப முடியாதது”

இதையும் படிங்க: விராட் கோலி செய்ஞ்ச இந்த விஷயத்தை என்னால நம்ப முடியல – பாராட்டுகளை தெரிவித்த ரிக்கி பாண்டிங்

“சச்சின் இந்த சாதனையை சமன் செய்வதற்கு அவர் எக்ஸ்ட்ராவாக உழைத்து உள்ளார் என்று நான் நினைக்கிறேன். இது உலகக்கோப்பை போன்ற தொடரில் நடந்துள்ளது நல்லதாகும். இன்னும் ஒரு லீக் போட்டியில் விளையாடி செமி ஃபைனலில் இந்தியா களமிறங்க உள்ளது. அடுத்து வரும் நாட்களும் விராட் கோலி மற்றும் இந்தியாவுக்கு கச்சிதமான நாட்களாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement