எதிரணிகளை 100க்குள் சுருட்டுவதில் இந்தியா உலக சாதனை.. மிஞ்சுவதில் விராட் கோலி வேற லெவல் சாதனை

Indian Team
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கி செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா இத்தொடரில் எதிரணிகளை இரக்கமின்றி தோற்கடித்து வருகிறது என்றே சொல்லலாம்.

குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டி உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்ற இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வெறும் 230 ரன்களை கட்டுப்படுத்தும் போது 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. அதை விட மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா கொல்கத்தாவில் வலுவான தென்னாப்பிரிக்காவை வெறும் 83 ரன்களுக்கு அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

உலக சாதனை:
முன்னதாக இந்த வருடம் ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 390 ரன்கள் அடித்த இந்தியா பின்னர் இலங்கையை 73 ரன்களுக்கு சுருட்டி 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தெறிக்க விட்ட இந்தியா 50 ரன்களுக்கு சுருட்டி 8வது முறையாக சேம்பியன் பட்டம் வென்றது.

அந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் இலங்கையை 55 ரன்களுக்கும் தென்னாபிரிக்காவை 83 ரன்களுக்கும் சுருட்டிய இந்தியா 2023 காலண்டர் வருடத்தில் மட்டும் 4 முறை எதிரணிகளை 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கியுள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை எதிரணிகளை 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கிய அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் 1993இல் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2006இல் தென்னாப்பிரிக்காவும் 2007இல் இலங்கையும் தலா 3 முறை எதிரணிகளை 100 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ததே முந்தைய சாதனையாகும். மேலும் இலங்கை (55) தென்னாப்பிரிக்கா (83) என அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிகளை 100 ரன்களுக்குள் இந்தியா ஆல் அவுட் செய்வதும் இதுவே வரலாற்றில் முதல் முறையாகும்.

இதையும் படிங்க: இந்திய அணியில் அது சுத்தமா இல்ல.. கண்டிப்பா எதிரணிகள் கனவு பலிக்காது.. முகமது யூசுப் கணிப்பு

இதை விட கடந்த போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கையை விட 88 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த விராட் கோலி நேற்றைய போட்டியில் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்காவை விட 101* ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை எதிரணிகள் எடுத்த ரன்கள் விட அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Advertisement