இந்திய அணியில் அது சுத்தமா இல்ல.. கண்டிப்பா எதிரணிகள் கனவு பலிக்காது.. முகமது யூசுப் கணிப்பு

Mohammed Yousuf
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனால் செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் பும்ரா வரை அனைவருமே உச்சகட்ட ஃபார்மில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியாவுக்கு அசால்டாக 300 – 400 ரன்களை அடித்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ள தென்னாப்பிரிக்கா பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

யூசுப் கணிப்பு:
ஆனால் அந்த அணியையும் கொல்கத்தாவில் வெறும் 83 ரன்களுக்கு சுருட்டி 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை காண்பித்து வருகிறது. இருப்பினும் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக இப்படி லீக் சுற்றில் மிரட்டலாக செயல்பட்டும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி தோல்வியை சந்தித்தது போல் இம்முறையும் இந்தியா தோற்கலாம் என்று மிஸ்பா-உல்-ஹக் போன்ற சில முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணியில் பலவீனம் என்பதே இல்லை என்று மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். அதனால் ஃபைனல் உட்பட அனைத்து போட்டிகளிலும் வென்று எதிரணிகளின் கனவை பொய்யாக்கி இந்தியா கோப்பையை வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று நினைத்தோம்”

- Advertisement -

“ஆனால் அப்போட்டிக்கு பின் இந்த உலகக்கோப்பையில் இந்தியா மட்டுமே தோற்காமல் டாப் அணியாக இருக்கிறது. அதனால் இந்தியா கோப்பையை வெல்லும். ஏனெனில் அவர்களிடம் டாப் கிளாஸ் பேட்மேன்கள்கள், பவுலர்கள் இருப்பதுடன் அவர்களின் ஃபீல்டிங் அபாரமாக இருக்கிறது. தங்களின் கடினமான உழைப்பை காட்டி இந்தியா முழு திறமையை வெளிப்படுத்துவதாலேயே சிறப்பாக செயல்படுகிறார்கள்”

இதையும் படிங்க: 145 வருட கிரிக்கெட்டில் நடக்காத நிகழ்வு.. வங்கதேசத்தின் மனசாட்சியற்ற செயலால்.. வினோதமாக அவுட்டான மேத்யூஸ்

“அதே சமயம் ஒன்று சேர்ந்து சிறப்பாக விளையாட உதவும் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பை மறக்கக்கூடாது. டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோருடைய கூட்டணி மிகவும் அழகாக அணியை வழி நடத்துகிறது. எனவே இத்தொடரில் இந்தியா ஏதாவது ஒரு போட்டியில் தோற்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா தோற்பதற்கு துரதிஷ்டம் மட்டுமே தேவை. ஏனெனில் அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்துள்ள அவர்களது அணியில் எந்த பலவீனமும் இல்லை” என்று கூறினார்.

Advertisement