அந்த 3 பிளேயர்ஸ்க்கு நான் ரசிகன்.. அவங்களிடம் அதை கத்துக்கிட்டு இருக்கேன்.. பாபர் அசாம் வெளிப்படையான பேட்டி

Babar Azam 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 90% நழுவ விட்டது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் தொடர்ந்து 8வது முறையாக உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிடமும் தோற்ற பாகிஸ்தான் சற்று கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது. அதன் காரணமாக வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி சென்னையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் முடிந்த அளவுக்கு போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பிடிச்ச வீரர்கள்:
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணியினர் அடுத்து வரும் போட்டிகளிலாவது ஆறுதல் வெற்றிகளை பதிவு செய்யும் முனைப்புடன் தயாராகியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கைய நட்சத்திரங்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தமக்கு மிகவும் பிடித்த வீரர்கள் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களிடமிருந்து கடினமான சூழ்நிலைகளில் எப்படி சிறப்பாக ரன்களை அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை கற்று வருவதாகவும் பாபர் அசாம் வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் இந்த 3 வீரர்களின் ரசிகனாக தாம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன்கள்”

- Advertisement -

“அவர்கள் இந்த உலகின் டாப் வீரர்களாக இருக்கின்றனர். குறிப்பாக அவர்கள் போட்டி நடைபெறும் மைதானங்கள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு படிப்பவர்களாக இருக்கின்றனர். அதனாலேயே அவர்கள் சிறந்தவர்களாகவும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை நான் எப்போதும் ரசிக்கிறேன். கடினமான சூழ்நிலைகளில் கடினமான பந்து வீச்சுக்கு எதிராக தங்களுடைய அணியை சிறப்பாக விளையாடி வெளிக்கொண்டு வருவதே விராட், ரோகித் மற்றும் கேன் ஆகியோரிடம் இருக்கும் சிறந்த விஷயமாகும்”

இதையும் படிங்க: பாண்டியா விளையாட மாட்டாரு.. ரொம்ப நாளாச்சு.. அடுத்த 4 மேட்ச்ல அது நடந்தா நல்லாருக்கும்.. ராகுல் பேட்டி

“இதைத்தான் நான் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்” என்று கூறினார். முன்னதாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் 2 அரை சதங்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களை பார்த்து கற்க வேண்டுமென முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement