பாண்டியா விளையாட மாட்டாரு.. ரொம்ப நாளாச்சு.. அடுத்த 4 மேட்ச்ல அது நடந்தா நல்லாருக்கும்.. ராகுல் பேட்டி

KL Rahul 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து ஏறத்தாழ செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ நகரில் இந்தியா தங்களுடைய 6வது போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள இங்கிலாந்து செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை 90% தவற விட்டுள்ள போதிலும் இப்போட்டியில் தங்களுடைய பலத்தை காட்டி இந்தியாவை தோற்கடிக்க போராட உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவாக செயல்படும் இந்தியா இப்போட்டியில் சுமாரான ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

- Advertisement -

பாண்டியா விலகல்:
அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமடையாததால் விளையாட மாட்டார் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த உலகக் கோப்பையில் முதல் 5 போட்டிகளிலும் ஒன்றில் கூட முதலில் பேட்டிங் செய்யாத இந்தியா தொடர்ந்து சேசிங் மட்டுமே செய்து வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

எனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு வேகமாக தங்களால் பெரிய ரன்களை குவிக்க முடிகிறது என்பதை சோதித்து பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்று ராகுல் தெரிவித்துள்ளார். குறிப்பாக முதலில் பேட்டிங் செய்து நீண்ட நாட்களாகி விட்டதால் அடுத்த 4 போட்டிகளிலும் அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படத் தயார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கியமான வீரர். எனவே காயத்தால் அவர் விளையாடாதது அணிக்கு சற்று பின்னடைவாகும். அந்த இடத்தில் சூரியகுமார் விளையாடுவார் என்று நினைக்கிறேன். எனவே ஹர்திக் பாண்டியா வரும் வரை சூரியகுமார் மீது எங்களுக்கு முழுமையான தன்னம்பிக்கை இருக்கிறது. அத்துடன் தோல்விகளை சந்தித்தாலும் எப்போதும் இங்கிலாந்து மிகவும் ஆபத்தான தனியாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க: லக்னோவில் நிலைமை மாறிடுச்சு.. இங்கிலாந்து மேட்ச்ல அஷ்வினை எடுத்துடாதீங்க.. இந்தியாவை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

“எனவே கடந்த சில போட்டிகளில் என்ன நடந்தது என்பதை பற்றி கவலைப்படாமல் இந்த போட்டியில் முழுமையான கவனத்தை செலுத்தி விளையாட உள்ளோம். மேலும் நாக் அவுட் போன்ற அடுத்த சுற்றுக்கு முன்பாக முதலில் பேட்டிங் செய்வது நல்ல வாய்ப்பாக இருக்கும். அதனால் அடுத்த 4 போட்டிகளிலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் அது எங்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் எங்களால் எப்படி வேகமாக விளையாட முடிகிறது என்பதை பார்க்க விரும்புகிறோம். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்து சற்று காலங்களாகி விட்டது” என்று கூறினார்.

Advertisement