லக்னோவில் நிலைமை மாறிடுச்சு.. இங்கிலாந்து மேட்ச்ல அஷ்வினை எடுத்துடாதீங்க.. இந்தியாவை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. அதில் ஏற்கனவே 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை 90% கோட்டை விட்ட இங்கிலாந்து கண்டிப்பாக வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்த இந்தியா சொந்த மண்ணில் செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்து அசத்தியுள்ளது. எனவே தற்சமயத்தில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் தடுமாற்றத்துடன் இப்போட்டிக்கு வந்துள்ள இங்கிலாந்தையும் தோற்கடித்து இந்தியா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் வேண்டாம்:
மேலும் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து வருவாரா ஷமி தொடர்ந்து விளையாடுவாரா என்பது போன்ற கேள்விகள் காணப்படுகிறது. அதை விட லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதுடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுவதால் இப்போட்டியில் முகமது சிராஜ்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்த போதிலும் தற்போது பேட்டிங்க்கு சாதகமாக மாறியுள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் சுழலுக்கு சாதகமாக இருந்த கருமண்ணால் செய்யப்பட்ட பிட்ச் தற்போது உலகக் கோப்பை தொடருக்காக புதுப்பிக்கப்பட்ட போது செம்மண்ணால் பேட்டிங்க்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே அஸ்வினை தப்பு கணக்கு போட்டு இங்கிலாந்து போட்டியில் சேர்க்க வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலைமையில் இருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக நீங்கள் ஆஃப் ஸ்பின்னரை விளையாடலாம் என்று சொல்வீர்கள். மேலும் லக்னோ மைதானம் பெரிதாக இருப்பதால் ஆஃப் ஸ்பின்னரை கொண்டு வரலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பந்து அதிகமாக சுழன்றதால் இந்த முடிவை எடுக்கலாம் என்று அனைவரும் நினைக்கலாம்”

இதையும் படிங்க: நாக் அவுட்டை பத்தி கவலைப்படாதீங்க.. வெற்றிக்காக தேவைப்பட்டால் அதையே செய்ங்க.. ரோஹித் கேப்டன்ஷிப்புக்கு கவாஸ்கர் ஆதரவு

“ஆனால் ஐபிஎல் தொடரில் இருந்த பிட்ச் தற்போது இல்லை. அதாவது தற்போதுள்ளது ஐபிஎல் தொடரில் இருந்த கருமண்ணால் செய்யப்பட்ட பிட்ச் கிடையாது. மாறாக தற்போதைய பிட்ச் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுக்கு உதவக்கூடிய செம்மண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கே இரவு நேரத்தில் பனியின் தாக்கமும் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். அதனால் இரண்டாவதாக ஃபீல்டிங் செய்யும் போது 3 ஸ்பின்னர்களுடன் விளையாடினால் பந்து ஈரமாக இருக்கும். அது எதிரணிக்கு சாதகமான ஆட்டத்தை உருவாக்கலாம்” என்று கூறினார்.

Advertisement