நாக் அவுட்டை பத்தி கவலைப்படாதீங்க.. வெற்றிக்காக தேவைப்பட்டால் அதையே செய்ங்க.. ரோஹித் கேப்டன்ஷிப்புக்கு கவாஸ்கர் ஆதரவு

Sunil Gavaskar 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையில் அணி இந்தியா எதிர்கொள்கிறது. அதில் ஏற்கனவே 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து மோசமாக செயல்பட்டு செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

மறுபுறம் தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணியில் தற்சமயத்தில் பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த போட்டியிலும் தடுமாறி வரும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா 6வது வெற்றியை பதிவு செய்து தங்களுடைய வெற்றி நடையை தொடருமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
முன்னதாக இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் ஒரு முறை கூட முதலில் பேட்டிங் செய்யாத இந்தியா சேசிங் மட்டுமே செய்து வெற்றியும் கண்டுள்ளது. மேலும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா முதலில் பந்து வீசும் முடிவையே எடுத்தார்.

அதனால் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக ஒரு போட்டியிலாவது முதலில் பேட்டிங் செய்து தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளைப் போல 400 ரன்கள் இந்தியா அடித்து சோதனை செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் நாக் அவுட் போட்டிகளைப் பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காக தேவைப்பட்டால் தொடர்ந்து சேசிங் செய்யும் முடிவை எடுக்குமாறு என்று கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் வெற்றியை மட்டும் பெற வேண்டும். அதற்கு சேசிங் செய்வது தேவைப்பட்டால் தொடர்ந்து அதையே செய்யுங்கள். நாக் அவுட் சுற்றை பற்றி கவலைப்படாதீர்கள். இப்போதே எதையும் அதிகமாக சிந்திக்காதீர்கள். அடுத்த போட்டியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக நவம்பர் 1ஆம் தேதி அல்லது நவம்பர் 5ஆம் தேதிகளில் நடைபெறும் நாக் அவுட் போட்டிகளில் எதில் விளையாடுவோம் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள்”

இதையும் படிங்க: 4,4,4,3 உலககோப்பை போட்டிகளில் 6-ஆவது பவுலராக அசத்தல் சாதனை படைத்த – ஆடம் ஜாம்பா

“மாறாக அக்டோபர் 29ஆம் தேதி எப்படி சிறப்பாக விளையாடலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வருங்காலத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். வருங்காலம் உங்களை பார்த்துக் கொள்ளும். தற்போதைய நிலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்ததாலும் சூரியகுமார் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதாலும் மாற்றங்கள் தேவையில்லை ” என கூறினார்.

Advertisement