4,4,4,3 உலககோப்பை போட்டிகளில் 6-ஆவது பவுலராக அசத்தல் சாதனை படைத்த – ஆடம் ஜாம்பா

Adam-Zampa
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியானது இறுதி நேரத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா சார்பாக டிராவிஸ் ஹெட் 109 ரன்களையும், டேவிட் வார்னர் 81 ரன்களையும் குவித்தனர். பின்னர் 389 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 50 ஓவர்களின் முடிவு 9 விக்க்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் எடுத்து வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஜாம்பா 10 ஓவர்கள் வீசி 74 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் உலக கோப்பை வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனை பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக குறைந்தது மூன்று விக்கெட்டுகளையாவது தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் எடுத்த வீரர்கள் பட்டியலில் அவர் ஆறாவது வீரராக இணைந்துள்ளார். ஆடம் ஜம்பா இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த வேளையில் அதன்பின் இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து என தொடர்ச்சியாக மூன்று போட்டியிலும் அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : முதல் முறையாக தவறிய துண்டு.. முடிவுக்கு வந்த உ.கோ லெஜெண்ட் மிட்சேல் ஸ்டார்க்கின் மாபெரும் சாதனை

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற நியூசிலாந்து போட்டியிலும் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது 16 விக்கெட்டுகளுடன் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை பட்டியலில் ஏற்கனவே சமிந்தா வாஸ், பிரெட்லீ, மெக்ராத், ஷாகித் அப்ரிடி, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement