முதல் முறையாக தவறிய துண்டு.. முடிவுக்கு வந்த உ.கோ லெஜெண்ட் மிட்சேல் ஸ்டார்க்கின் மாபெரும் சாதனை

Micthell Starc
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்தை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் 81, டிராவிஸ் ஹெட் 109 ரன்கள் எடுத்த உதவியுடன் 389 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிக்ஸ் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த நியூசிலாந்துக்கு ரச்சின் ரவீந்தரா மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்து 116 ரன்களும் டார்ல் மிட்சேல் 54 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

தடுமாறிய ஸ்டார்க்:
ஆனாலும் டாம் லாதம், கிளன் பிலிப்ஸ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் கடைசியில் ஜிம்மி நீசம் 58 ரன்கள் எடுத்தும் போராடிய நியூசிலாந்தை 383/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வந்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இந்த போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஒய்ட் பந்தில் பவுண்டரி வழங்கிய மிட்சேல் ஸ்டார்க் மொத்தம் 11 ரன்களை கொடுத்து தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

குறிப்பாக ஜிம்மி நீசம் ரன் அவுட்டாகாமல் கடைசி பந்தையும் எதிர்கொண்டிருந்தால் அவருக்கு பெரிய சவாலை கொடுத்திருப்பார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சுமாராகவே செயல்பட்ட மிட்சேல் ஸ்டார்க் இந்த போட்டியில் மொத்தம் 9 ஓவரில் 89 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. இதன் வாயிலாக உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த வீரர் என்ற அவருடைய தனித்துவமான உலக சாதனை இப்போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

அதாவது 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் 2015 முதல் விளையாடி வரும் அவர் 2023இல் நெதர்லாந்துக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டி வரை 2/47, 6/28, 2/18, 2/29, 4/14, 2/40, 2/28, 2/20, 1/31, 5/46, 1/74, 2/43, 4/55, 2/55, 4/43, 5/26, 2/59, 1/70, 1/31, 2/53, 2/43, 1/65, 1/22 என மொத்தம் 23 போட்டிகளில் தொடர்ந்து குறைந்தபட்சம் 1 விக்கெட்டுகளை எடுத்து வந்தார். ஆனால் இந்த போட்டியில் விக்கட்டை எடுக்காத காரணத்தால் அவருடைய அந்த சாதனை நிறைவு பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பங்களாதேஷ் அணியை வீழ்த்த இவ்ளோ ரன்னே போதும்னுதான் முடிவு பண்ணோம் – ஆட்டநாயகன் மிக்கீரென் பேட்டி

அவரை தவிர்த்து 2003 – 2007 வரை கிளன் மெக்ராத் இதே போல 13 போட்டிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 1 விக்கெட்டை எடுத்து இந்த சாதனை பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். அப்படி அரிதாக சொதப்பிய அவர் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் மோசமான பவுலிங்கை பதிவு செய்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மிட்சேல் ஸ்டார்க் : 0/89, நியூசிலாந்துக்கு எதிராக, 2023
2. மிட்சேல் ஸ்டார்க் : 1/74, இந்தியாவுக்கு எதிராக, 2019
3. ஆடம் ஜாம்பா : 3/74, நியூசிலாந்துக்கு எதிராக, 2023

Advertisement