தெ.ஆ மண்ணில் 2018 ஆம் ஆண்டு விராட் கோலி செய்த சாதனைகள் என்ன தெரியுமா? – வெடிச்சி செதறி இருக்காரு

Kohli
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 ஆம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் முழு திறமையுடன் செயல்பட்டு கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரமாக போராடும் என்பதால் இத்தொடருக்காக இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் செயல்படுவார் என எதிர்பார்த்த வேளையில் அவரின் பதவியை பறித்த பிசிசிஐ அதை ரோஹித் சர்மாவிடம் வழங்கியது. ஆனால் அவர் காயம் அடைந்த காரணத்தால் அவருக்கு பதில் இந்த தொடரின் இந்திய கேப்டனாக அனுபவமில்லாத கேஎல் ராகுல் முதல் முறையாக செயல்பட உள்ளார்.

Rahul

- Advertisement -

விராட் கோலியின் விஸ்வரூபம்:
கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் கடந்த 2018ஆம் ஆண்டு 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றது. அந்த தொடரில் கேப்டனாக விளையாடிய விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக விஸ்வரூபம் எடுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில்

1. டர்பன் நகரில் நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 270 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் விராட் கோலி அபாரமாக பேட்டிங் செய்து 119 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக முதல் போட்டியிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Kohli

2. அதை தொடர்ந்து செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்காவை யுஸ்வென்ற சஹால் 5 விக்கெட்கள் எடுக்க வெறும் 118 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது.இதை தொடர்ந்து 119 என்ற எளிய இலக்கை துரத்திய இந்தியாவிற்கு விராட் கோலி 50 பந்துகளில் 46* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தார்.

- Advertisement -

3. இதை அடுத்து கேப்டவுன் நகரில் நடந்த 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு கேப்டன் விராட் கோலி வானளவு உயர்ந்து நின்றார் என்றே கூறலாம். அந்தப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 159 பந்துகளில் சதம் விளாசி 160* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால் இந்தியா 303 ரன்கள் எடுத்தது. பின் 304 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா வெறும் 179 ரன்களுக்கு சுருண்டதால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்டநாயகன் விருதை மீண்டும் வென்றார்.

Kohli 3

4. பின்னர் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மீண்டும் அபார பேட்டிங் செய்த விராட் கோலி 83 பந்துகளில் 75 ரன்கள் குவிக்க இந்தியா 289 ரன்கள் எடுத்தது. ஆனால் அந்த நாளில் மழை பெய்ததால் பின்னர் 202 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

- Advertisement -

5. அதன்பின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடந்த 5வது போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் விராட் கோலி 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் செஞ்சூரியனில் நடந்த கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 205 ரன்கள் இலக்கை இந்தியா சேசிங் செய்தது. அப்போது மீண்டும் அதிரடியாக பேட்டிங் செய்த விராட் கோலி வெறும் 96 பந்துகளில் சரவெடியாக வெடித்து 129* ரன்கள் விளாசி இந்தியாவை மீண்டும் வெற்றி பெறச்செய்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

Kohli 1

உலகசாதனை:
மொத்தத்தில் அந்த தொடரில் அவர் வெறும் 6 போட்டிகளில் 1 அரை சதம் 3 சதங்கள் உட்பட 558 ரன்களை 186.00 என்ற மிரட்டலான சராசரியில் 99.46 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்தார். இதன் வாயிலாக “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நேருக்கு நேர் தொடரில் (பைலேட்ரல் சீரிஸில்) 500+ ரன்கள் குவித்த முதல் வீரர்” என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்தார்.

- Advertisement -

வரலாறு படைத்த இந்தியா :
இந்த வெற்றிகளின் வாயிலாக 6 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 5 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா “வரலாற்றிலேயே முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவில் ஒரு ஒருநாள் தொடரை வென்று புதிய சரித்திர சாதனை” படைத்தது. அந்த சரித்திர வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றது மட்டுமல்லாமல் “தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன்” என்ற வரலாற்றையும் எழுதினார்.

இதையும் படிங்க : வரலாற்றில் தெ.ஆ மண்ணில் அதிக ரன்கள், சதங்கள், விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்களின் – லிஸ்ட் இதோ

இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்த அந்த தொடர் போல இம்முறையும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியா வெற்றி பெறுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement