வரலாற்றில் தெ.ஆ மண்ணில் அதிக ரன்கள், சதங்கள், விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்களின் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் துவங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் இந்தியா தோல்வி அடைந்தது. எனவே நாளை துவங்கும் ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு பதில் கேஎல் ராகுல் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்ய உள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Rahul

- Advertisement -

சவாலான தென்ஆப்பிரிக்கா:
பொதுவாகவே தென்ஆப்பிரிக்க அணியை எந்த ஒரு வகையான கிரிக்கெட்டிலும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இந்தியாவுக்கு சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. அதை தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் தொடரிலும் பார்த்தோம். அந்த வகையில் இம்முறையும் நடைபெற உள்ள இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவிற்கு நிச்சயம் கடும் சவாலை அளிக்கும் தொடராகவே கருதப்படுகிறது. சரி அப்படிப்பட்ட தென்னாப்பிரிக்க மண்ணில் இதற்கு முன் வரலாற்றில் இந்தியா எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது போன்ற வரலாற்று புள்ளி விவரங்களைப் பார்ப்போம்:

வரலாற்றில் நேருக்கு நேர்:
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் – தென்ஆப்பிரிக்காவும் இதற்கு முன் மொத்தம் 84 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 46 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா இந்தியாவை விட வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியா 35 போட்டிகளில் மட்டுமே வென்றது, 3 போட்டிகள் மழையால் முடிவின்றி போனது.

Kohli 1

குறிப்பாக போட்டி நடைபெறும் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த 2 அணிகளும் வரலாற்றில் 34 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 22 போட்டிகளில் வென்ற தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் வலுவான அணியாக உள்ளது. இந்தியா 10 போட்டிகளில் மட்டுமே வென்றது, 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

- Advertisement -

கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த 2 அணிகளும் கடந்த 2018ஆம் ஆண்டு மோதிய 6 போட்டிகள் ஒருநாள் தொடரை 5 – 1 என்ற கணக்கில் விராட் கோலி தலைமையிலான இந்தியா வென்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக “தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வென்று” சாதனையும் படைத்தது.

kohli 2

அதிக ரன்கள்:
தென்ஆப்பிரிக்காவில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக முன்னாள் கேப்டன் விராட் கோலி 782 ரன்கள் விளாசி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:
1. விராட் கோலி : 782* ரன்கள் (14 போட்டிகள்)
2. சச்சின் டெண்டுல்கர் : 553 ரன்கள் (22 போட்டிகள்)
3. ராகுல் டிராவிட் : 519 ரன்கள் (11 போட்டிகள்)
4. முகமது அசாருதீன் : 412 ரன்கள் (12 போட்டிகள்)
5. சௌரவ் கங்குலி : 391 ரன்கள் (9 போட்டிகள்)

Kohli

தென்ஆப்பிரிக்க மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்:
விராட் கோலி : 3 சதங்கள் (14 போட்டிகள்)
சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ராமன், யூசுப் பதான் : தலா 1 சதங்கள்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க மண்ணில் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்:
1. ராகுல் டிராவிட் : 7 (11 போட்டிகள்)
2. முகமது அசாருதீன் : 4 (12 போட்டிகள்)
3. விராட் கோலி : 3 (14 போட்டிகள்)

Chahal

அதிக விக்கெட்கள் :
தென்ஆப்பிரிக்காவில் இந்தியா போன்ற ஆசியக் கண்டத்திற்கு வெளியே உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பவுலர்கள் விக்கெட்டுகளை எடுப்பது என்பது எப்போதுமே கடினமான ஒன்றாகும். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்கள் இதோ:

1. குல்தீப் யாதவ் : 17 விக்கெட்கள் (6 போட்டிகள்)
2. யுஸ்வென்ற சஹால் : 16 விக்கெட்கள் (6 போட்டிகள்)
3. ஜாஹீர் கான் : 15 விக்கெட்கள் (9 போட்டிகள்)
4. அனில் கும்ப்ளே : 14 விக்கெட்கள் (19 போட்டிகள்)
5. ஜவகள் ஸ்ரீநாத் மற்றும் முனாப் படேல் : தலா 13 விக்கெட்கள் (14 மற்றும் 6 போட்டிகள்)

இதையும் படிங்க : தோனிக்காக விராட் கோலி கூறிய அதே வார்த்தைகளை விராட் கோலிக்காக கூறி – நெகிழவைத்த முகமது சிராஜ்

சிறந்த பந்துவீச்சு & 5 விக்கெட் ஹால்:
தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பந்துவீச்சாளராகவும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளராகவும் யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார். 5/22 – சஹால், செஞ்சூரியன் மைதானம், 2018.

Advertisement