தோனிக்காக விராட் கோலி கூறிய அதே வார்த்தைகளை விராட் கோலிக்காக கூறி – நெகிழவைத்த முகமது சிராஜ்

Siraj-1
- Advertisement -

கடந்த சனிக்கிழமை அன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அவர் குறித்த செய்திகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. மேலும் விராட்கோலி படைத்த சாதனைகள், கேப்டனாக அவர் வழி நடத்திய விதம் மற்றும் இந்திய அணியில் அவருடைய பங்களிப்பு என பல விவரங்கள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்கள் என அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது இந்த பதவி விலகல் ஒருபுறம் வருத்தத்தை அளித்திருந்தாலும் மறுபுறம் அவரது இந்த முடிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தற்போது அணியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடி வரும் சில வீரர்களும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ரோகித் சர்மா, அஷ்வின், பும்ரா போன்றோர் விராட் கோலி உடனான பிணைப்பு குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ள வேளையில் தற்போது சக வீரரான இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விராட்கோலி உடனான தனது பிணைப்பை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிடுகையில் :

- Advertisement -

“என்னுடைய சூப்பர் ஹீரோ நீங்கள்”, நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி என்ற சொல் போதாது. எப்போதும் நீங்கள் என்னுடைய சகோதரராகவே இருப்பீர்கள். இத்தனை ஆண்டு காலமாக என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. என்னுடைய மோசமான நிலையில் கூட என்னிடம் இருந்த சிறப்பான திறனை கண்டறிந்தவர் நீங்கள். ” You Will Be Always Be My Capain” கிங் கோலி என்று முகமது சிராஜ் நெகிழ்ச்சியான சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது விராட் கோலியும் இதே வார்த்தையை பயன்படுத்தி ” You Will Be Always Be My Capain” என்று தோனியை வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அதே வரிகளை பயன்படுத்தி முகமது சிராஜ் தன்னுடைய சூப்பர் ஹீரோவான விராட் கோலிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி கேப்டனா இருந்து செய்த மிகப்பெரிய விஷயம் ஒன்னு இருக்கு – வாசிம் ஜாபர் ஓபன்டாக்

பெங்களூர் அணிக்காக விராட் கோலியுடன் இணைந்து விளையாடி வரும் முகமது சிராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் தொடர்ந்து தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தற்போது இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை வீரராக விளையாடி வருகிறார். அதோடு அடுத்ததாக நாளை துவங்க உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement