விராட் கோலி கேப்டனா இருந்து செய்த மிகப்பெரிய விஷயம் ஒன்னு இருக்கு – வாசிம் ஜாபர் ஓபன்டாக்

Jaffer
- Advertisement -

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி அன்று திடீரென இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்திய அணிக்காக சுமார் 7 ஆண்டுகாலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வந்த விராட் கோலியின் இந்த திடீர் விலகல் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி வெளியேறியது அனைவரையும் வருத்தமடையச் செய்தது.

kohli

அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சி அடையும் வகையில் இருந்தாலும் அவரது முடிவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் விராட் கோலியின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி ஒரு கேப்டனாக திருப்திகரமாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

அவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு சவால்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியை மூன்று விதமான கிரிக்கெட்டிலும் வழிநடத்திய அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதை தவிர்த்து ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார்.

IND

இந்திய மண்ணில் மட்டுமின்றி அயல்நாட்டு மண்ணிலும் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை பலமுறை விராட் கோலி நிரூபித்துள்ளார். அதன்படி டி20 தொடர்களை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அவர்களது மண்ணிலேயே வென்று காட்டியுள்ளார். அதேபோன்று இதுவரை எந்த ஒரு ஆசிய கேப்டனும் செய்யமுடியாத சாதனையையும் கோலி செய்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையும் விராட்கோலி படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது யாரும் செய்யாத சாதனையாக நான் கருதுகிறேன். அதேபோன்று இந்திய அணி வீரர்களிடையே பிட்னஸ்-க்கு அதிக முக்கியத்துவத்தை கொண்டுவந்து அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் இளமைத் துடிப்போடு, அதிவேகமாக செயல்பட அவரே ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : இத்தனை கோடி வேனும் கறார் காட்டிய இஷான் கிஷன் – தூக்கி எறிந்த ஐ.பி.எல் அணி (இதெல்லாம் தேவையா?)

அதோடு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பலத்தை அவரது தலைமையிலேயே அதிகப்படுத்தினார் என்றால் அது மிகை அல்ல என்றும் இனியும் இந்திய அணியின் வெறிக்காக விராட்கோலி தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்றும் வாசிம் ஜாபர் புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement